வார பலன் – (14 – 21 ஓகஸ்ட் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

எதிர்நீச்சல் போடுபவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பர். அவருக்கு புது வேலையும் அமையும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும் என்றாலும் ராகு 4-ல் நிற்பதால் பல், காது வலி, தொண்டை புகைச்சல் வந்துப் போகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். நம்பிக்கையின்மை, வீண் செலவு, அசதி, சோர்வு வந்து நீங்கும். கன்னிப்…

Read More

வார பலன் (31 – 7 ஆகஸ்டு 2017)

மேஷம் தடம் மாறாதவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதரங்களால் பயனடைவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். ஆனால் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் அலைச்சல், பகை, நிம்மதியின்மை வந்துச் செல்லும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். 5ம் தேதி வரை புதன் 5-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். குரு 6-ம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை வரும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். கலைத்துறையினர்களே!…

Read More

வார பலன் (10 – 17 ஜூலை 2017)

மேஷம் எதார்த்தவாதிகளே! 12ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 4-ல் நிற்பதால் வேலைச்சுமை, அசிடிட்டி தொந்தரவு, தூக்கமின்மை வந்து செல்லும். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாயாரின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. ஆனால் சூரியன் சாதகமாக இருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். மகனுக்கு வேற்று மாநிலத்தில் வேலை அமையும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுக்ரன் 2ல் நிற்பதால் உங்களை யதார்த்தமாகப் பேச வைப்பார். உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்களும் அமையும். புதன் 4-ல் நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்….

Read More

வார பலன் (3 – 10 ஜூலை 2017)

மேஷம் கடந்த காலத்தை மறக்காதவர்களே! ராசிநாதன் செவ்வாயும், சூரியனும் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் கூடும். பாதிப் பணம் தந்து முடிக்கப்பாடமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். பதவிகள் தேடி வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் உங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். கல்வித் தகுதிக் கேற்ப…

Read More

வார பலன் – ஜூன் 26 முதல் 3 ஜூலை 2017 வரை

மேஷம் குடும்ப நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் நீங்கள், தன்னலம் இல்லாத தியாகியைப் போல் வாழ்பவர்கள். சூரியன் 3-ல் நிற்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் பணவரவு உண்டு. அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 29ம் தேதி முதல் சுக்ரன் 2ல் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செலவு செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்-. உத்யோகத்தில் பிறரின் குறைகளை…

Read More

வார பலன் – (19 – 26 ஜூன் 2017)

மேஷம் தன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே செய்பவர்களே! சூரியனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். மகளுக்கு திருமணம் ஏற்படாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். ராகு 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவர்களின் உயர்கல்வி, திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவசரம் வேண்டாம். உறவினர் பகை வந்துச் செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை தூக்க வேண்டாம். ஆனால் கேது லாப வீட்டில் தொடர்வதால் புது பொறுப்புகள், வாய்ப்புகள் தேடி வரும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசியல்வாதிகளே! கட்சி…

Read More

வார பலன் – (12 – 19 ஜூன் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

மேஷம் எல்லோருக்கும் நல்லதே செய்யும் நீங்கள், வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். குருபகவான் 6-ம் வீட்டில் தொடர்வதால் வீண் சந்தேகம் வரும். செலவினங்கள் அதிகரிக்கும். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். உறவினர், நண்பர்களுடன் பகைமை வரக்கூடும். சுக்ரன் 12-ல் மறைந்து நிற்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். செவ்வாயும், சூரியனும் 2ல் நிற்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்-. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களுடனும், பங்குதாரர்களுடனும் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்த்தாலும் மேலதிகாரிகளின் ஆதரவால் சலிப்பு நீங்கும். கலைத்துறையினரே!…

Read More

இந்த வார ராசி பலன்கள் (09-06-2017 முதல் 15-06-2016 வரை) – சுப்பிரமணியன் ஜோதிடர்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு வருமானம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் மூலம் வருமானம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் உள்ள ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.. சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால்…

Read More