தமிழ் மொழிக்கு கூகிள் கொடுத்துள்ள புதிய அங்கீகாரம் இது

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3 மடங்கு வேகமாக நிகழக்கூடியதாக இருக்கும். இதனை மனதில் கொண்டே தமது நிறுவனம் குரல் தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்தமுறை தற்போது 30 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பில்லியனுக்கும் அதிகமாக மக்களுக்கு நன்மை தரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூகிளின் பேச்சு அங்கீகாரம் என்ரொய்ட் குரல் தேடலின் 119 மொழிகளுடன் இணைந்து செல்கிறது. இந்தநிலையில் அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஜியுடன் குரல்களை வெளிப்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

வட்ஸ்அப் இல் புதிய வசதி

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் எப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பல மில்லியன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வட்ஸ் எப்பின் ஊடாக இதுவரை சில வகையான கோப்புக்களை (வீடியோ, படங்கள், PDF, SpreadSheet, Word Document) மட்டுமே பகிரக்கூடியதாக இருந்தது.ஆனால் இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் எந்தவொரு கோப்பு வகையினையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் iOS சாதனங்களில் 128 MB ஆகவும், Android சாதனங்களில் 100 MB கோப்பின் கொள்ளளவு வரையறுக்கப்பட்டுள்ளது.

Read More

மிரட்டும் டுகாட்டி மான்ஸ்டர் 797 பைக்

உலகளவில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டுகாட்டி தனது புதிய மான்ஸ்டர் 797 பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2016ல் இத்தாலியில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகமான இந்த பைக், டுகாட்டியின் மான்ஸ்டர் வகையில் மிகவும் சிறிய மாடலாக உள்ளது. ஏர்-கூல்டு 803 சிசி திறனில் எல்-ட்வின் இன்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் 797 மாடலில் உள்ளது. இது 74 பி.எச்.பி பவர் மற்றும் 68.6 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த பைக்கில் உருவாகும் இத்தகைய பவர் மற்றும் டார்க் திறனை, பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் பின் சக்கரங்களுக்கு கடத்தும். மான்ஸ்டர் 797 பைக்கில் ஒரே பகுதியை கொண்ட டூபூலர் ஸ்டீலினால் ஆன ஃபிரேம் உள்ளது. அதனுடன் இரட்டை ஸ்பார் ஸ்விங் களம் உள்ளது. பைக்கின் முன்பக்கத்தில் சஸ்பென்ஷனின்…

Read More

உங்கள் போன் பேட்டரி வெடிக்கப்போகிறது என்பதற்கான 5 அறிகுறிகள்.!

சமீப காலமாக இந்த மொபைல் பேட்டரி வெடிக்குமா..? என்ற ஒரு தனிப்பட்ட பயம் அனைவரின் கண்களிலும் தெரிகிறது மற்றும் நாம் இப்போது இந்த குறிப்பிட்ட சந்தேக தலைப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு தீர்க்கமான தெளிவை பெற்றே தீர வேண்டிய நிலையில் உள்ளோம் குறிப்பாக நம் அன்புக்குரியவர்களின் கைகளில் கேஜெட்டுகள் தவழும் இத்தருணத்தில் நாம் தெளிவை பெற்றே ஆக வேண்டும். இம்மாதிரியான பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சாம்சங் ஸ்மார்ட்போன் பெயர் தான் அதிகம் அடிபடுகிறது. கேலக்ஸி நோட் 7 வெளிப்படையாக தீப்பிடிக்கும் வாய்ப்புக்கள் இருந்தது அண்மையில் ஒரு சாம்சங் கேலக்ஸி ஜே5 கருவி வெடித்தது. அப்படியாக உங்கள் சாம்சங் பேட்டரி பாதுகாப்பாக உள்ளதா.? அதை செக் செய்வது எப்படி.? பொதுவான ஒரு காரணம் இது மிகவும் பொதுவான ஒரு காரணம் தான் அதாவது நீங்கள் சாதாரணமாக போன்…

Read More

எந்தவொரு ஆப் உதவியுமின்றி மொபைலில் உள்ள புகைப்படங்களை மறைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் மதிப்புமிக்க தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கலாம். நீங்கள் அதை பாதுகாப்பாக வைக்காவிட்டால் சில சமயங்களில் மற்றவர்கள் அதனை அணுகக்கூடும் அல்லது திருடப்படக்கூட செய்யலாம். அதனை தவிர்க்க உதவும் ஒரு வழிகாட்டி தொகுப்பே இது. இதில் எந்த விதமான ஆண்ட்ராய்டு ஆப் பயன்படும் இல்லாமல் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பது சார்ந்த எளிமையான வழிமுறைகள் விளக்கப்படங்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த தந்திரத்தை படித்து அறிந்த பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஒரு ஆப் உதவி இல்லாமல் கூட உங்களின் தனிப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் உங்களால் பாதுகாக்க முடியும். உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் பைல் மேனேஜர் பயன்பாட்டைத் திறக்கவும். பைல் மேனேஜர் கோப்புக்குள் நுழைந்த பின்னர் அதில் ‘பைண்ட் ல் ஹிட்டான பைல்ஸ்’ என்ற ஆப்ஷனை காண்பீர்கள் (இந்த ஆப்ஷனை…

Read More

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்!

வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும். தற்போது வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவறுதலாக அனுப்பிய செய்தி, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை 5 நிமிடத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளும் ‘ரீகால்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி கொண்ட அப்டேட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள வாட்ஸ்அப் பதிப்பு 2.17.190. அடுத்து 2.17.210…

Read More

இலங்கை அகலப்பட்டை தொழில்நுட்பத்தில் புரட்சி

குளோபல் பிராட்பேண்ட் இணைய வேகத்தில் இலங்கை 68 வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய இணைய நெறிமுறைகள் பதிப்பு 4ஆம் (IPv4) பிரிவில் இணையத்துடன் நொடியில் 8.5 மெகாபைட் (8.5 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில் இலங்கை உள்ளது. இது 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை தேடி செல்லும் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாக கருதப்படுகின்றது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பிராந்தியத்தின் அக்கமாய் டெக்னாலஜிஸ் நிறுவத்தினால் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 89வது இடம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலகில் வேகமான இணைய சேவையை வழங்கும் நாடுகளில் தென்கொரியா முதல் இடத்தை பிடித்துள்ளது. நொடியில் 28.6 மெகாபைட் (28.6 Mbps) வேகத்தில் இணைக்கூடிய இடத்தில் தென்கொரியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கலாநிதி அப்துல் கலாமை கொளரவப்படுத்திய நாசா

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பக்டீரியா வகையை சேர்ந்த புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாமின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி மையம் பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அங்கு புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள், இந்த புதிய உயிரினம், பக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்திற்கு மறைந்த, டொக்டர் அப்துல் கலாமின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர், அதாவது, சொலிபேசில்லஸ் கலாமி என்று பெயர் வைத்துள்ளனர். விண்வெளி அறிவியலில் கலாமின் நிபுணத்துவத்தை நினைவு கூறும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Read More

எந்தவொரு லேப்டாப்பையும் டச் ஸ்க்ரீனாக மாற்ற வேண்டுமா?

ஸ்மார்ட்போன்கள் வரவை அடுத்து நமது விரல்கள் ‘டச்” செய்தே பழக்கப்பட்டுவிட்டன. அதேபோல் இப்போது பல லேப்டார்களில் டச்போன்ற அனைத்துவசதிகளும் வசதிகளும் வந்துவிட்டது, சாதாரண லேப்டாப்பை விட டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட லேப்டாப்களின் விலை மிகவும் அதிகம். ஆனால் தற்போது சாதாரண லேப்டாப்பைக் கூட டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட லேப்டாப்பாக மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் தற்போது வந்துவிட்டது. நியோனோட் நிறுவனம் புதிதாக ‘ஏர்பார்’ என்ற தயாரிப்பை வெளியிட்டுள்ளது.இது கண்ணுக்குப் புலப்படாத ஒளியை உமிழ்ந்து அதன் மூலம் தொடுதலை உணர்ந்து, கணினிக்குத் தெரிவிக்கும் தன்மை கொண்டது. இதற்கு அந்நிறுவனம் ‘ஜீரோ ஃபோர்ஸ் சென்சிங் டெக்னாலஜி’ எனப் பெயரிட்டுள்ளது. கணினி சந்தையில் பொதுவாக 15.6 திரைக்கொண்ட பல லேப்டாப் மடல்கள் கிடைக்கின்றன. இவற்றின் மாடல்களை வைத்து இந்த ஏர்பாரை வெளியிட்டுள்ளது நியோநிறுவனம். இதன் ஆரம்ப விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.4700 எனக்கூறப்படுகிறது….

Read More

மனிதன் – கணினி இடைத்தொடர்பு (HCI) அன்று – இன்று – நாளை

கணினி வளர்ச்சியில் கணினி மனிதன் இடையேயான இடைத்தொடர்பும் பாரிய வளர்ச்சி கண்டு வந்துள்ளது. அது தொடர்பான சுவாரஸ்ஸயமான வீடியோ இங்கே பகிரப்படுகின்றது.

Read More