இலங்கை அன்ட்ரொய்ட் பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார் நிலையில் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுதொடர்பில் அன்ட்ரொயிட் திறன்பேசி பாவனையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘அழ வேண்டுமா’ என்று பொருள்படும் வொன்னக்ரை என்ற கப்பம்பெறும் மென்பொருள் தீம்பொருள் ஒன்றின் ஊடாக 99 நாடுகளில் பல்வேறு கணினிகள் பாதிக்கப்பட்டன. ஆய்வுகளில் தற்போது இவ்வாறான மென்பொருள் அன்ட்ரொயிட் திறன்பேசிகளிலும் பரவ ஆரம்பித்திருப்பதாகவும், அதன்பாதிப்பு இலங்கையிலும் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த மென்பொருள் கைப்பேசிக்கு மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதேனும் வடிவங்களில் அனுப்பப்படும் போது, அதனை திறப்பதன் ஊடாக குறித்த கைப்பேசியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதில் சேமிக்கப்பட்டுள்ள ஏனைய தொடர்பிலக்கங்களின் கைப்பேசிக்கும் பரவும். அத்துடன் கைப்பேசியில் உள்ள முக்கியமான ஆவணங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் குறித்த…

Read More

இது உங்கள் வீட்டில் இருக்கிறதா! – எச்சரிக்கை

FIDGET SPINNER என்று குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று இதனை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நகரங்களில் ஸ்பின்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அதிக அளவில் இதனை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இதை உபயோகிப்பவரின் ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும் என்றும் மேலும் அறிவுத்திறமையை மழுங்கடிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் இதை வைத்து விளையாடும் போது அதனுள் வீரல் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதோடு குழந்தைகள் பல வகையில் இதனால் ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது. எனவே FIDGET SPINNER உபயேகிப்பதை தவிர்ப்பது நல்லது.

Read More

ப்ளூவேல் விளையாட்டு – வெளியேற வழி உண்டு

நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்… ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள். நிச்சயம் அதில் இருந்து மீண்டு வர முடியும். நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் உள்ளே நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்… நீலத்திமிங்கல சவால் விளையாட்டில் முதலில் கையில் பிளேடால் கீறவும், அதிகாலையில் எழுந்து தனிமையில் பேய்ப்படம் பார்க்கவும் என்பதுபோன்ற சாதாரண சவால்கள் கொடுக்கப்படுகிறது. தனிமையில் செய்துகொள்ளும் வித்தியாசமான சவால்களை அவர்கள் நமக்கு எதிராக மிரட்டல் ஆதாரமாக சேகரித்துக் கொள்கிறார்கள். அப்படி மிரட்டியே அடுத்தடுத்த கட்டளைகளுக்கு பணிய வைப்பார்கள்….

Read More

மூன்று புதிய ஐ-போன்கள் வெளியிடப்பட்டது – விபரங்கள், படங்கள் உள்ளே

ஆப்பிள் நிறுவனம் அதன் மூன்று புதிய தலைமை ஐபோன் மாடல்களை – ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெளியான மூன்று ஐபோன்களுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய கேட்ஜெட்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் எக்ஸ் வெளியீட்டு நிகழ்வின் சூப்பர் ஸ்டார் சாதனமான இது ஹோம் பொத்தானை கொண்டிருக்கவில்லை. சரி அப்போது சாதனத்தை திறப்பது எப்படி என்று பார்த்தால், இதன் பேஸ்ஐடி (FaceID) உங்களுக்கு உதவும். சாதனத்தில் சேமிக்கப்படும் முகத்தரவுகள் ஆனது ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கப்படும். இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிஸ்பிளே ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத…

Read More

புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை

உயிருக்கு உலை வைக்கும் புளுவேல் விளையாட்டை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. புளூவேல் விளையாட்டை விளையாடி தனது உயிரை இளைஞர்கள் பலர் மாய்த்துக்கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு இந்தியாவில் பரவி, தமிழ் நாட்டிலும் பரவியுள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் மதுரையில் ஒரு இளைஞர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், பாண்டிச்சேரியில் ஒரு பெண் வங்கி ஊழியரை போலீசார் சமீபத்தில் மீட்டனர். அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்த விளையாட்டை ஆடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், புளுவேல் விளையாட்டை நேரிடையாகவோ, இணையத்தின் மூலமாகவே…

Read More

ப்ளூ வேல் அட்மின் 5000 பேர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தற்போது உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் விளையாட்டு ‘ப்ளூ வேல்’. ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டு உலக நாடுகளில் பல இளைஞர்களின் உயிரை எடுத்துவிட்டது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கால் பதித்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ‘ப்ளூ வேல் அட்மின்’ கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி 5000க்கும் மேற்பட்டோர் ‘ப்ளூ வேல்’ அட்மினாக செயல்படுகின்றனர் என கூறியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 50 நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதே இதன் இறுதி முடிவு. ஆனால் அவ்வாறு தற்கொலை செய்ய தயங்கியவர்களே இந்த அட்மின்கள். இவர்கள் தற்கொலைக்கு பயந்து கெஞ்சி கூத்தாடி அட்மினாக செயல்படுகிறேன் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த தகவல் அனைத்தும், தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள கபாராவ்ஸ்க் ராய் என்ற பகுதியில் கைதான 17 வயது…

Read More

புளூவேல் விளையாட்டிற்கு பின் இருக்கும் மர்மம் – இளம் பெண் பிரியாவின் தகவல்களை திருடிண அட்மின்

புதுச்சேரியில் புளுவேல் விளையாட்டில் சிக்கி மீட்கப்பட்ட இளம் பெண் வங்கி ஊழியர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. லேப்டாப்பில் உள்ள தகவல்களை திருடி மிரட்டியதால் உடலில் 10 இடங்களில் குண்டூசியால் எப் -45 என்று கிழித்து கொள்ளும் சைகோ நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப சம்பவத்தின் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. புளூவேல் என்ற பிளாக்மெயில் விளையாட்டில் சிக்கி இருந்த புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்த பிரியா என்ற வங்கி ஊழியர் ஞாயிற்றுகிழமை அதிகாலையில் கடலில் இறங்கி செல்பி எடுத்த போது மீட்கப்பட்டார்..! அப்போது ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பெண்காவலர்களின் உதவியுடன் மீட்டனர். உறவினர்கள் வந்து அவரை அழைத்துச்செல்ல முயன்றபோது சைகோ மனநிலையில் காணப்பட்ட பிரியா அங்கிருந்து செல்லமறுத்து அடம்பிடித்தார் அவரை மீட்ட காவல்துறையினரை பாராட்டிய, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கினார்….

Read More

பேஸ்புக்கில் பொய் செய்தி போடுவோருக்கு தண்டனை கொடுக்க தயாராகியது பேஸ்புக்

ஃபேஸ்புக்கை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும், பொய்யான செய்தி வெளியிடுபவர்களுக்கும், வதந்திகளை பரப்புவர்களுக்கு ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறு சமூக விரோத செயல்களை செய்யும் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்படுவதோடு அந்த பக்கங்களில் தோன்றும் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பொய்யான செய்தி அதிகளவில் தடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஃபேஸ்புக்கில் பொய் செய்திகளும், பதட்டமான நேரத்தில் வதந்திகளும் அதிகம் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் வருத்தம் தெரிவிப்பதோடு தொடர்ந்து உண்மையான செய்திகளை சிலகாலம் பதிவு செய்த பின்னரே அவர்களது பக்கங்களில் மீண்டும் விளம்பரம் தோன்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Read More

Youtube லோகோ வில் மாற்றம்

உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளமான கூகுளின் யூடியூப் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வசதிகளை அள்ளி தந்து கொண்டிருக்கின்றது. யூடியூப் வீடியோ மூலம் மட்டுமே பலர் நிரந்தர வருமானம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யூடியூப் இணையதளம் முதன்முதலாக ஒரு அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. யூடியூப் இணையதளம் ஆரம்பித்து 12 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் முதல்முறையாக லோகோவை மாற்றியுள்ளது. மேலே உள்ள படத்தில் பழைய லோகோவும் புதிய லோகோவும் உள்ளது. இந்த மாற்றம் மொபைல் மற்றும் டெக்ஸ்டாப் வெர்ஷன் ஆகிய இரண்டிலும் செய்துள்ளதாகவும், இந்த மாற்றத்தை யூடியூபின் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் யூடியூப் அறிவித்துள்ளது.

Read More

இப்போ என்ன செய்வீங்க? ஆப்பு வைத்த சரஹா

சரஹா செயலியில் பிரச்சனைக்குரிய தகவல்களை அனுப்பும்பட்சத்தில், அனுப்பியவரின் தகவல்கள் வெளியிடப்படும் என சரஹா எச்சரிக்கை விடுத்துள்ளது. சரஹா எனும் செயலி கடந்த சில நாட்களாக பிரபலமாகியுள்ளது. மொட்டை கடிதாசி போன்று தகவல்களை சரஹா மூலம் அனுப்ப முடியும். ஆனால் அனுப்பியவர் யார் என்பதை பார்க்க முடியாது. இதனால் தற்போது இந்த சரஹா ஃபேஸ்புக்கில் செம ஹாட் டிரண்ட். இந்நிலையில் சரஹா செலயலியை உருவாக்கிய சைன் அலாப்தின் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- சரஹா செயலி நமக்கு அறிமுகமானவர்களிடம் உண்மையை தெரிவித்து, அவர்களிடம் ஆக்கப்பூர்வமான தகவல்களை தெரிவிக்க உருவாக்கினோம். எல்லாவற்றையும் நேரடியாக மற்றவர்களிடம் தெரிவிக்க முடியாது என்பதால் மெசேஜ் அனுப்பியது யார் என்ற தகவல்களை மறைத்தோம். இதனை மக்கள் சரியான நோக்கத்தில் பயன்படுத்துவதாய் தெரியவில்லை. சரஹா செயலியை பயன்படுத்தி மற்றவர்களுக்கு அச்சுறுத்தல், மிரட்டல் போன்றவை நடப்பதாக…

Read More