மீனம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மீன ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தின் தொடக்கத்தில் 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருவின் நேர் பார்வை செப்டம்பர் 1-ந் தேதி வரை உங்கள் ராசியில் பதிவாகிறது. அதன்பிறகு அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கிறார். 8-ல் குரு வரும்பொழுது இடர்பாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லை வரலாம். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். உறவினர் பகை ஏற்படும். ஊர்மாற்றங்களும், இடமாற்றங்களும் திருப்தி தருமா? என்பது சந்தேகம் தான். மாதத்தின் பிற்பகுதியில் எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே யோகங்கள் ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், பிள்ளைகள் மூலம் விரயங்கள் ஏற்படலாம். 5-ம் இடத்தில் செவ்வாய், புதன் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம…

Read More

கும்பம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

அனுபவம் தான் சிறந்த வழிகாட்டி என்று கூறும் கும்ப ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி 10-ம் இடத்தில் பலம் பெற்று விளங்குகிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றன. மாதத் தொடக்கத்தில் சூரிய பலம் நன்றாக இருக்கிறது. சுக்ரனும் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும், உங்களுக்கு மிகுந்த நன்மை தருவதாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் இதுவரை இருந்த கேது விலகியதால், மனக்குழப்பம் அகலும். விலகிச் சென்ற ராகு-கேதுக்களை நீங்கள் விரும்பிச் சென்று வழிபட வேண்டியது அவசியமாகும். முறையான சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதோடு, அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பதால் அதற்குரிய குரு பிரீதியும் செய்வது…

Read More

மகரம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

நல்ல சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நழுவவிடக் கூடாது என்று சொல்லும் மகர ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி லாப ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். சமீபத்தில் உங்கள் ராசியில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் அடியெடுத்து வைக்கிறார்கள். எனவே சர்ப்ப தோஷம் உருவாகிறது. இதன் விளைவாக உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். மன அமைதி குறைவு, தேவையில்லாத வீண் விரயங்கள், ஆரோக்கியத் தொல்லை உருவாகலாம். செப்டம்பர் 2-ந் தேதி வரை குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே அதன்பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் விரயங்களிலிருந்து தப்பிக்க இயலும். வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலைத் தொல்லை ஏற்பட லாம். மாற்று மருத்துவத்தின் மூலம் ஆரோக்கியத்தைச் சரிசெய்து கொள்ள வழிபிறக்கும். உத்தியோக…

Read More

தனுசு – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பேசும் தனுசு ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ஏற்றமும், இறக்கமும் கலந்து தான் வரும். வரவும், செலவும் சமமாகும். விரய ஸ்தானத்தில் சனியின் ஆதிக்கம் இருக்கிறது. எனவே விரயங்கள் கூடும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பத்தக்கதாக அமையுமா? என்பது சந்தேகம் தான். வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமைய குருப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கிடையில் சர்ப்பக் கிரகங்களுக்குரிய பரிகாரங்களை முறையாகச் செய்வதோடு, சனிக் கிழமை தோறும் அனுமனையும் வழிபட வேண்டும். மேலும் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விநாயகரை வழிபடுங்கள். சதுர்த்தி திதி அன்று விரதமிருந்து அருகம்புல்…

Read More

விருச்சிகம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

சொல்லும் சொற்களையெல்லாம் வெல்லும் சொற்களாக மாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் புதனோடும், ராகுவோடும் இணைந்திருக்கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகாரத்துவ யோகம் பெற்றவர்களின் அனுகூலம் வந்து சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு பல நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் பலம் பெற்று விளங்குவதால், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் இதயம் மகிழும் விதத்தில் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் மாதம் இது. உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதம் தங்கள் குணங்களை மாற்றிக் கொண்டு செயல்படுவர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும்,…

Read More

துலாம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

விட்டுக் கொடுத்துச் செல்வதே வாழ்க்கை என்று சொல்லும் துலாம் ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 9-ம் இடத்தில் சஞ்சரிக் கிறார். 3,6-க்கு அதிபதியான குருபகவான் 12-ல் சஞ்சரிக்கிறார். எனவே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் சூழ்நிலை உருவாகும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விபரீத ராஜயோகம் செயல்படுவதால் தனவரவிற்கு பஞ்சம் இருக்காது. உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட இடமாற்றத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் பழைய இடத்திற்கே வந்து பணிபுரியும் யோகம் உண்டு. மேலதிகாரிகளின் பகை மாறும். ஓய்வின்றி உழைத்தும் பலனில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இனி மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறப் போகிறது. குரு- சந்திர யோகத்தோடு இந்த மாதம் தொடங்குவதால், குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உணவுக் கட்டுப்பாட்டால் உடல் நலத்தை…

Read More

கன்னி – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டும் கன்னி ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, சமீபத்தில் பெயர்ச்சியான ராகுவும், கேதுவும் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து மாதம் தொடங்குவதால் நீங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். திடீர் முன்னேற்றங்கள் உருவாகும். சென்ற மாதத்தில் திட்டமிட்டு தள்ளிப்போன காரியங்கள், இந்த மாதத்தில் நடைபெறத்தொடங்கும். குறிப்பாக வீடு கட்டுவதில், வாங்குவதில் இருந்த தடை அகலும். லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, எதிர்பாராத வரவுகள் வந்து சேரும். வராமல் இருந்த கடன்கள் கூட கைக்கு கிடைக்கலாம். ஜென்ம குரு இந்த மாதத்தில் மாறப்போகிறார். கடந்த ஓராண்டாக உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த குரு பகவான், செப்டம்பர் 2-ந் தேதி துலாத்திற்கு வந்தவுடன் மேலும்…

Read More

சிம்மம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

எந்நேரமும் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, முயற்சி களில் வெற்றி கிட்டும் விதத்திலேயே உள்ளது. ஒன்று உங்கள் ராசிநாதன் சூரியன் பலம் பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். மற்றொன்று உங்கள் ராசியில் இருந்து இதுவரை தடைகளைக் கொடுத்த ராகுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து குடும்பத்தில் பிரச்சினைகளைக் கொடுத்த கேதுவும் விலகிவிட்டார்கள். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கவும், 6-ம் இடத்து கேதுவால் உத்தியோகம், தொழிலில் உன்னத நிலையைக் காணவும், மாதத் தொடக்கத் திலேயே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. இப்பொழுது உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் மட்டும் இருக்கிறது. மந்தன் எனப்படும் சனியின் ஆதிக்கம் இருக்கும் பொழுது, மந்த கதியில் சில காரியங்கள் நடக்கலாம். நினைத்த காரியம் வெற்றிபெறவில்லையே என்று கவலைப்படுவீர்கள்….

Read More

கடகம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்க நாளில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உச்சம் பெற்றிருக் கிறார். உங்கள் ராசியில் யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். இதுபோன்ற காலங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீடு மாற்றங்கள், நாடு மாற்றங்கள் விரும்பியபடி நடைபெறுமா? என்பது சந்தேகம்தான். விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் பக்கபலமாகக் கொள்ள வேண்டிய நேரமிது. மாதத் தொடக்கத்தில் தனாதிபதி சூரியன் 2-ல் இருப்பதால், பொருளாதார நிலை சீராக இருக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், மாற்றங் களும் வந்து சேரும். நீங்கள் ஆராய்ந்து அறிந்து ஒரு செயலில் ஈடுபட்டாலும் கூட…

Read More

மிதுனம் – ஆவணி மாத ராசி பலன்கள் (17-8-2017 முதல் 16-9-2017 வரை)

கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே! ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தன ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு பெயர்ச்சியான ராகு-கேதுக்களின் அமைப்பின் படி பார்க்கும் பொழுது, கேது பகவான் 8-ல் இருப்பதால் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகலாம். அஷ்டமத்து ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும், ஆதாயம் குறையாது. எந்தக் காரியமாக இருந்தாலும், ஒருமுறைக்கு இருமுறை முயற்சி செய்து தான் முடிவடையும். மாதத் தொடக்கத்தில் அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருக்கிறது. 4-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திலும் பதிவதால் சென்ற மாதத்தில் ஏற்பட்ட…

Read More