இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக புதிய சட்டம்

கணனி குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கணனி ஹெக்கர்கள் சைபர் தாக்குதல்களின் மூலம் இலங்கையை கேந்திர நிலையமாகக் கொண்டு மேற்கொள்ளும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது. வங்கி கணக்குகள் மீது சைபர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் இரண்டு மட்டுமே இலங்கையில் பதிவாகியுள்ளன. பங்களாதேஷ் வங்கி மீதான தாக்குதல் மற்றும் அண்மையில் தாய்வானில் பதிவான தாக்குதல் என்பனவே இவ்வாறு பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னதாக இடம்பெற்றது கிடையாது என்பதனால் வழக்குத் தொடர்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய சட்டங்களை உருவாக்கி கணனி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கணனி குற்றச் செயல்களை தடுக்க முயற்சிக்கப்பட்டு…

Read More

இலங்கையில் இந்துத் தமிழ்க் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குங்கள்

வவுனியாவின் பல இடங்களிலும் இந்து தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் தீபாவளிக்கு தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. “இந்துத் தமிழர்களே” எனத் தலைப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டு பிரசுரத்தின் இறுதியில் சிவசேனா அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சகல அரசாங்க ஊழியர்களும் அறியவேண்டிய,செய்யவேண்டிய விடயமொன்று தொடர்பான சுற்றறிக்கை

இலங்கை அரச ஊழியர்கள் கட்டாயமாக செய்யவேண்டிய விடயம் ஒன்று தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏற்புடைய வகையில் ஓய்வூதியத் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து ஊழியர்களும் இச் சுற்றறிக்கையை கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியமானதொன்றாகின்றது. மூலம்: அன்பு ஜவஹர்ஷா அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து

Read More

இலங்கை பெண் ஆசிரியைகளுக்கு விசேட கவுண் ஆடை

கர்ப்பிணி ஆசிரியைகள் புடைவை அணிந்து பணிக்கு வருவது கடினமானதாக காணப்படுவதனால், அவர்களுக்கு கவுண் வகையிலான விசேட ஆடை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்று இலங்கை கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஏனைய பல திணைக்களங்களில் இவ்வாறு கர்ப்பிணிப்பெண்கள் விசேட ஆடைகளை கர்ப்ப காலத்தில் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆசிரியைகளுக்கும் பொருத்தமான ஒழுக்கமான அடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது போன்று ஊழியர்களின் பிரச்சினைகளை ஊழியர் மட்டத்தில் இருந்து சிந்தித்து அதற்கு தீர்வுத்திட்டங்களை முன்வைக்கும் கல்விஅமைச்சின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும்.

Read More

உயர்தரத்துக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நாளை காத்திருக்கும் அதிர்ச்சி

தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு அதிகமாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையை பிரகடன படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராச் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கமையவே தேசிய பாடசாலைகளில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு அதிகமாக தேசிய பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் ஆசியரியர்கள் 12000 பேர் காணப்படுவதாகவும் அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு நாளைய தினம் இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றங்கள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு, கல்வி பொது தராதர பத்திர உயர்தர மாணவர்களுக்கு கற்பிக்கும் மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குரிய இடமாற்றத்திற்கான அறிவித்தல் கடிதம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு…

Read More

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையேயான பாழடைந்த பஸ் களின் பயங்கரம்

யாழ்ப்பாணம் கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் இன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் சமயத்தில் அதிகாலை ஆனையிறவுக்கு அண்மையில் பாலம் ஒன்றில் மோதுண்டது. அதிர்ஸ்டவசமாக பயணிகள் காயங்களின்றி தப்பினர். இதேபோன்ற சம்பவம் ஒன்று அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலும் இடம்பெற்றிருந்தது. தற்போது யாழ் – கொழும்பு இடையே புகையிரத சேவைகள் இடம்பெறுகின்றபோதும், தாமதமான வருகை மற்றும் ஆசன முற்பதிவு விரைவில் முடிவடைந்துவிடுகின்றமை காரணமாக மக்கள் இப் பேரூந்துகளையே பெருமளவில் நம்பியுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்பு இடையே பஸ் சேவையில் ஈடுபடும் பல பஸ்கள் நியாயமான பாவனை காலத்தை கடந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றமை அவதானிக்கப்படுகிறது. இதுபோன்ற பஸ்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதுபோகின்றது.

Read More

தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 1000 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 18 – 28 வயதுடைய ஆண், பெண் இருபாலாரும் குறித்த பொலிஸ் சேவையில் இணைய முடியும். பொலிஸ் பற்றாக்குறையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே காணப்படுகிறார். இதனால் சேவைகளை வழங்குவதில் பெரும் இடர்கள் காணப்படுகின்றன. வேலையற்ற பட்டதாரிகளிற்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பில் அவர்களுக்கு பொருத்தமான பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன. என்றார்.

Read More

சற்று முன்னைய செய்தி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ச மற்றும் டீ.வீ.சானக உட்பட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் – விபரம் உள்ளே

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. வவுனியா மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு, தற்போது உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானமெடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (09) மாலை யாழில் ஒன்றுகூடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் அடிப்படையில் ஏகமனதாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை தமிழ் அரச ஊழியர்களுக்கு முற்கூட்டி சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு அரச தமிழ் ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை 16ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இம் மாத சம்பளத்தை எதிர்வரும் 16 ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இரத்தினபுரி மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வழமையாக ஆசிரியர்களுக்கு 20ம் திக்தியும், ஏனைய அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதியும் சம்பளம் கணக்கில் இடப்படுவது வழமையாகும். இம் மாதம் 16 ஆம் திகதி தீபாவளிப் பண்டிக்கை கொண்டாடப்பட இருப்பதால், சம்பளத்தையும் முற்கூட்டி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பு மாதத்திலும், ரம்லான் பண்டிகை காலத்திலும் முற்கூட்டியே சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Read More