பாலத்தில் இருந்து கீழே குதித்த (O/L) மாணவி

பாடசாலை மாணவியொருவர் பன்னிபிட்டிய மேல் பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்த அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 11 ஆம் தர மாணவியொருவரே இவ்வாறு குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அம் மாணவி மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

Read More

ஆர்னால்ட் கல்வி அமைச்சர் இல்லை – நானே நியமிப்பேன் என்கிறார் விக்னேஸ்வரன்

புதிய கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வியடம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விக்கினேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இதில் எந்த வித உண்மையும் இல்லை. யார் யாரை நியமிப்பது என்பது சம்பந்தமாக என்னால் முடிவெடுக்கப்படவில்லை எனறும் கூறியுள்ளார். செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக உரிய நேரத்தில் குறிப்பிட்ட நியமனங்கள் என்னால் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை நானே மேற்பார்வை செய்து வருகின்றேன் எனவும் அறிக்கையில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More

தபால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஓர் சூழ்ச்சித் திட்டம்

தபால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும் என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹாலீம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று பணிப்புறக்கணிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் நோக்கிலாகும். தபால் திணைக்களத்திற்கு சொந்தமான எந்தவொரு சொத்தையும் நாம் விற்பனை செய்யப் போவதில்லை. தபால் திணைக்களத்திற்கு சொந்தமான சொத்துக்களைக் கொண்டு நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. தபால் திணைக்களத்தை வினைத்திறன் மிக்க ஓர் நிறுவனமாக மாற்றியமைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே போராட்டத்தை கைவிட்டு பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம்…

Read More

இனி நீங்கள் இவ்வாறு நடந்து சென்றால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுவீர்கள்

ரயில் பாதையில் நடப்போரை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார். தங்களதும் ஏனையவர்களினதும் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் ஆபத்தான முறையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தி இவ்வாறான நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு ரயில் பாதையில் நடப்போருக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது. 26 பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கரையோரப் பாதுகாப்பினை இலக்கு வைத்து இந்த சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர். முதலில் கரையோரப் பகுதிகளில் இந்த சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆபத்து மற்றும் இவ்வாறு ரயில் பாதையில் நடப்பதனால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read More

பம்பலபிட்டியில் நவீன் பென்ஸ் காரை கரப்பான்பூச்சி போல் கவிழ்த்த சிறுவன்

பம்பலப்பிட்டி, வஜிர வீதியில் அதி நவீன மெர்சீடிஸ் பென்ஸ் கார் ஒன்றை செலுத்திய சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ளார். 15 வயதுடைய சிறுவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்தி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார். நேற்று பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்புள்ள சந்தியில் இருந்து அதிக வேகத்தில் வந்த இந்த கார் வஜிர வீதியில் வைத்து வலதுபுறமாக திரும்பியுள்ளதுடன் வீதியில் இருந்த மின் விளக்கு கம்பம் ஒன்றையும் தேசப்படுத்தியுள்ளது. பிரபல தனியார் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரியுடன் தொடர்புடைய இந்த சிறுவனே குறித்த புதிய காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளை நிற பென்ஸ் கார் கடுமையான சேதமடைந்துள்ள நிலையில், காரை ஓட்டிச் சிறுவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவன்…

Read More

வடக்கு மாகாணத்தில் புதிய கல்வி அமைச்சர் நியமனம்

வடக்கு மாகாணத்தின் புதிய கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர்களுக்குமிடையில் புதிய கல்வி அமைச்சர் நியமனம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசா தனது பதவியை இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு வடமாகாண விளையாட்டு அமைச்சின் இணைப்பாளராக இதுவரை காலமும் பணியாற்றிய இம்மானுவேல் ஆனோல்டை கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பா.அரியரட்ணம் அவர்கள் முன்மொழிய தமிழரசுக் கட்சியின் ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டார்கள். அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்…

Read More

சீ.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை – அமைச்சர்கள்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓய்வுப்பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு முதல்வர் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு ஒருமாதக் காலத்தில் தமது அறிக்கையை முன்வைக்கவுள்ளது. ஆனால் இவ்வாறான குழு ஒன்றின் நியமனம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என்று, அவர்கள் இருவரும் ஆசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இவ்வாறான குழுவை நியமிப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழும் இல்லை என்றும், மாகாணசபையின் செயற்குழுவுக்கே இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோதமான எந்த விசாரணைக் குழுவிலும் தாங்கள்…

Read More

ரம்ழான் தினத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம் குழு ஒன்றின் மீது அடி உதை

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திட தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மற்றும் ஒரு முஸ்லிம் குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஒன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் முஸ்லிம்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ்வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, இரும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா, உலுக்குளம் பொலிஸார்…

Read More

கொழும்பு நகரில் குப்பை வீசியோருக்கு ஏற்பட்ட நிலை இது

கொழும்பு நகரங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கொழும்பு நகரங்களில் பிரதான இடங்களில் குப்பை வீசிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 454 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் வாகனங்களில் வந்து குப்பைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பௌத்த மதத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதியின் கடும் தொணி

சில சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பௌத்த பிக்குமாருக்கு அவதூறு ஏற்படும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை போதி வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமரபுர பௌத்த பீடத்தின் வைபவம் ஒன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலமாக நாட்டின் கௌரவமிக்க பௌத்த மதத் தலைவர்கள் அவதூறுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க போவதில்லை. இது குறித்து கவலையை தெரிவித்து கொள்வதுடன், இது தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவு என தான் கருதுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நலனுக்காவுமே நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர சமூக சீர்குலைவுக்கோ அல்லது நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தவோ அதனை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் இனங்களுக்கு இடையில் சமாதானம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, சகல…

Read More