விளையாட்டு அமைச்சரை விட நாட்டுக்கு சேவை செய்துள்ளேன் – சுசந்திகா ஜெயசிங்கே

விளையாட்டுத் துறை அமைச்சரை விடவும் தான் நாட்டிற்காக அதிக சேவைகளை செய்த ஒருவர் என்று ஒலிம்பிக் பதக்க வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளாார். ஒலிம்பிக் வீரர் ஒருவர் மூலம் நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய சேவையையும் ஒலிம்பிக் பதக்கத்தின் பெறுமதியையும் தன்னால் தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் கூறினார். தற்போது சுமார் 25 கோடி வரையில் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றிற்கு கேள்வி இருப்பதாகவும், எனினும் அதனை விற்பதற்கு தற்போது அவசரம் இல்லை என்றும் கூறியுள்ளார். வரும் நாட்களில் அழைப்பு விடுக்கப்பட்டாலும் தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரின் கீழ் செயற்பட தயாரில்லை என்றும், அமைச்சர் தொடர்பில் தனக்கு திருப்தி இல்லை என்றும், புரிந்துணர்வின்றி செயற்படுவதற்கு முடியாதென்றும் சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளாார். எவ்வாறாயினும் தனது செலவினங்களுக்காக வருங்காலத்தில் தனியார் துறையில் தொழில் ஒன்றை செய்யும் எண்ணம்…

Read More

யாழ்ப்பாண சுண்டிக்குளி மாணவி ஆசிகாவுக்கு முதன்மை அரச கௌரவம்

இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு, 58 கிலோகிராம் நிறைப் பிரிவில், 136 கிலோகிராம் நிறையைத் தூக்கி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

சுசந்திக்கா ஜயசிங்க வின் பதக்கம் 25 கோடி ரூபாய்க்கு

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார். தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார். இந்த பதக்கத்தின் பெறுமதியை உலகம் அறிந்து கொண்டுள்ள போதிலும் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் அறிந்து கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்தவர்.

Read More

சுசந்திகாவின் முடிவு புதிய சட்டம் ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் தாம் நாட்டுக்காக பெற்ற பதக்கங்களை விற்க அல்லது ஏலத்தில் விட தடை விதிக்கும் முகமாக சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார். அண்மையில், குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க தான் பெற்ற ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக தெரிவித்திருந்தார். தான் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

யாழ்ப்பாண பெண் தர்ஜினி க்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம் – படங்கள் இணைப்பு

அவுஸ்திரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கீகாரத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளார். வலைபந்தாட்ட போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக செயற்பட்டு வரும் தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்திரேலியாவின் City West Falcons கழகத்திற்காக விளையாடி வருகின்றார். இந்நிலையில், VICTORIAN NETBALL LEAGUE போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போது வரையில் 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில் இறுதியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும், தர்ஜினி சிவலிங்கம் விளையாடிய கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தொடரில் இதுவரையில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தர்ஜினி சிவலிங்கம் 227 கோல்ஸ் போட்டுள்ளார். இந்நிலையில், அவுஸ்திரேலியா வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுநருக்கான அங்கிகாரத்தை தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சுதந்திகா ஜெயசிங்க பொய் சொல்கிறார்

“சுதந்திகா ஜயசிங்க நாளை வேண்டுமானாலும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வந்து தனது பணிகளைச் செய்யலாம்” என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக சுசந்திகா ஜயசிங்க விடுத்துள்ள அறிவிப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விளையாட்டு நிதியத்திலிருந்து சுசந்திகா ஜயசிங்கவுக்கு 80 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிதியத்தின் பணத்திலிருந்து இப்படியான கொடுப்பனவுகளைச் செய்யமுடியாது. எனவே, முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 75 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் வாகன வசதிகளையும் செய்துகொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்தேன். 60 ஆயிரம் ரூபாவை வழங்கவே அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதனால்தான் சுசந்திகா ஜயசிங்க இப்படி சொல்கின்றார். (சுதந்திகா, தனக்கு கொடுப்பனவுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.) பதக்கத்தை விற்பனைசெய்யவேண்டியதில்லை. அமைச்சுக்கு வந்து அவர்…

Read More

பண தட்டுப்பாட்டால் தனது பதக்கங்களை ஏலம் விடவுள்ள சுசந்திக்கா ஜயசிங்க

இலங்கைக்கு பெருமை பெற்று கொடுக்கும் வகையில் 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தனது பதக்கங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது 25 வருட விளையாட்டு வாழ்க்கையில் தற்போது போன்று என்றும் வீழ்ந்து போனதில்லை என அவர் தெரிவித்துள்ளார். விளையாட்டு துறை அமைச்சின் ஆலோசகராக தனக்கு இதுவரை கிடைத்த சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தன்னிடம் உள்ள பெறுமதியான சொத்தாக கருதப்படுகின்ற ஒலிம்பிக் பதக்கங்களை ஏலத்தில் இட்டு வாழ்க்கையை நடத்துவதற்கு முயற்சிப்பதாக சுசந்திக்கா ஜயசிங்க மேலும் தெரிவித்துளளார்.

Read More

சக வீரர்களுக்காக குளிர்பான பை ஏந்திய டோனி – படம் இணைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், தற்போதைய வீரருமான மகேந்திரசிங் டோனி மைதானத்திலிருந்த இந்திய அணியின் வீரர்களுக்கு குளிர்பானங்கள் கொண்டுவந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியின் போதே டோனி குளிர்பாணங்களுடன் மைதானத்துக்குள் நுளைந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர். உலகில் முன்னணி கிரிக்கெட் வீரரான டோனியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Read More

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேலும் இருவர் தெரிவாகியுள்ளனர். குறித்த மூவரும் முதல் தடவையாக சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளனர். இவர்கள் மூவரும் வெளிநாடு செல்லவிருப்பதும் இதுவே முதல் தடவையாகும். தாய்லாந்தில் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இம் மூவருடன் மேலும் ஐவர் பங்குபற்றவுள்ளனர். தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனிதா, 3.45 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டினார்….

Read More

IPL – படுமோசமான தோல்வியுடன் வெளியேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் லீக் போட்டியில் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். அதன்படி முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பிளேயில் 32 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த பஞ்சாப். புனேயின் அசத்தல் பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. அதிகபட்சமாக அக்சார் பட்டேல் 22 ரன்னும், சகா 13 ரன்னும், ஷேன் மார்ஷ் மற்றும் ஸ்வாப்னில் சிங் தலா 10 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய புனே தொடக்க வீரரான திரிபாதி 20…

Read More