நீண்ட காலத்தின் பின் தேசிய விளையாட்டு விழாவில் கிளிநொச்சி தமிழ் பெண் சாதனை

43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இந்த போட்டி, கொழும்பு – ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை (05) நடைபெற்றுள்ளது. போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர்.தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டுள்ளார். இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28.17 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி ஈட்டிக் கொண்டார். இதேவேளை, விளையாட்டு திணைக்களத்தினால் தேசிய ரீதியாக திறந்த முறையில் நடந்த படும் மாஷல் ஆட் (வீர விளையாட்டு) போட்டிகளில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்கள் நீண்ட காலம் தங்கப்பதக்கம் பெறவில்லை. மேலும், பெண்கள் தரப்பில் தேசிய ரீதியிலான மாஷல் ஆட் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

பேட்மிண்டன்: பரபரப்பான இறுதிப்போட்டியில் சிந்துவுக்கு ஏற்பட்ட நிலைமை

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் பி. வி. சிந்துவை வென்று ஜப்பான் வீராங்கனை நசோமி ஒக்குஹாரா தங்கப்பதக்கம் பெற்றார். கிளாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்பட்டத்தின் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில், இந்தியாவின் பி. வி. சிந்து மற்றும் ஜப்பான் வீராங்கனை ஒக்குஹாரா ஆகியோர் களமிறங்கினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளுக்கு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் பி.வி. சிந்து எளிதாக முதல் செட்டை வென்றுவிடுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், கடுமையாக போராடிய ஒக்குஹாரா 21-19 என்று முதல் செட்டை தனது வசமாக்கினார். இரண்டாவது செட்டில் இரு வீராங்கனைகளுக்கு சற்றும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். இறுதியில் சிந்து 22 -20 என்று இரண்டாவது செட்டை வென்றார். முதல் இரண்டு செட்களை போலவே இறுதி செட்டும் மிகவும் பரபரப்பாக…

Read More

கமெராவை பந்தால் சிதறடித்த மகேந்திரசிங் டோனி

இலங்கை- இந்திய அணிகளுக்கிடையே நாளை இரண்டாம் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியில் ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே, ரகானே, கேதர் ஜாதவ், தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடுவராக நின்றுள்ளார். தோனி, பேட்டிங்கில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்பொழுது, தோனி அடித்த பந்து அங்கிருந்த கேமராவை பதம் பார்த்தது. இதனால், கேமராமேன் பதறிப்போய் கேமராவை எடுத்துக்கொண்டு பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார். கேமராவின் மேல்கவர் உடைந்தது இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ரவி சாஸ்திரி தோனியை மறைமுகமாக சாடி வருவதால், தனது பேட்டிங் திறனையும், வலிமையையும் காட்ட தோனி பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போட்டியிலும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை தோனி வெளிபடுத்தக்கூடும்…

Read More

யாழ்ப்பாண பெண் தர்ஜினியின் சாதனை! அவுஸ்திரேலியா தலை நிமிர்ந்தது

இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் தனது திறமையை முழு அரங்கிற்கும் வெளிப்படுத்திய தர்ஜினி மாத்திரம் அணிக்காக 51 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் தர்ஜினியின் அணி பூர்வாங்க இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தச் சுற்றில் City West Falcons அணி தனது பூர்வாங்க இறுதியில்…

Read More

மட்டக்களப்பு தமிழ் இளைஞன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி சாதனை

மட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனுசாந்திற்கு 2 – 3 மாதங்கள் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்டு தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவாகியுள்ள இரு தமிழ் வீரர்களில் தனுசாந்தும் ஒருவராக உள்ளார். இவர் படுவான்கரை – கொக்கடிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்வி கற்று வருகிறார். அத்தோடு எதிர்வரும் காலங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கை தேசிய அணியில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர்! சர்வதேச ஊடகங்கள் பாராட்டு

லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இலங்கை வீரரான அணில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். முதல் 50 மீற்றர் தூரம் வரை அணில் பிரசன்ன முன்னிலையில் ஓடிக் கொண்டிருந்தார். எனினும் போட்டியின் இறுதி 40 மீற்றர் தூரத்தின் போது தென்னாபிரிக்க வீரர் அணில் ஓடிக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாக வந்துள்ளார். எப்படியிருப்பினும் அவருக்கு அவரது காலில் பொருத்தப்பட்டுள்ள உபகரணத்தினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனை அணில் புரிந்து கொண்டுள்ளார். ஓடி வரும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தென்னாபிரிக்க வீரர் அணில் பிரசன்னவுக்கு அருகில் வந்து விழுந்துள்ளார். ஓட்ட எல்லைக் கோட்டை கடக்க சொற்ப விநாடிகள் உள்ள நிலையில், கீழே விழுந்து வீரருக்கு அருகில்…

Read More

டுவிட்டரின் விதிமுறையை மீறிய சச்சின்; ரசிகர்கள் எச்சரிக்கை

சச்சின் செய்த டுவீட் டுவிட்டரின் விதிமுறையை மீறுவதாகும் என பலரும் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டுவிட்டரில் தொடர்ந்து தனது கருத்துகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சுமார் 1.7 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். சச்சின் தான் நடித்த உடல் ஆரோக்கியம் குறித்த விளம்பரம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், உங்கள் நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல் நிறைய சாக்கு போக்கு சொல்கிறார்களா? #NoExcuse என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் வசிக்கும் நகரம் மற்றும் மொபைல் எண்ணோடு டேக் செய்யுங்கள். நான் அவர்களோடு பேசுகிறேன் என பதிவிட்டு இருந்தார். உடனே அவரது ரசிகர்கள் சிலர் தங்களது நண்பர்களின் மொபைல் எண்களை பதிவு செய்தனர். இந்நிலையில் சச்சின் டுவீட் தனியுரிமையை பாதிக்கும் விதமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும்…

Read More

பெற்றோர் பரிசளித்த கே.டி.எம் டியூக் 390 பைக்கில் ஸ்டண்ட் செய்து உயிரிழந்த 15 வயது சிறுவன்

புதியதாக வாங்கிய கே.டி.எம் பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்று அது தவறாக சென்றதால் விபத்து ஏற்பட்டு பதினைந்து வயது சிறுவன் ஒருவன் பலி ஆனான். டெல்லியில் வசித்து வந்த மொஹமத் உமர் ஷேக் என்ற 15 வயது பள்ளிச் சிறுவனுக்கு, பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.எம் டியூக் 390 மாடல் பைக்கை வாங்கி தந்தனர். அந்த சிறுவன் தன் வீட்டின் அருகில் வசிக்கும் மொஹமத் அனாஸ் என்ற இளைஞருடன்புதியதாக வாங்கிய கே.டிம்.எம் பைக்கில் சம்பவம் நடந்த நாளன்று ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளான். சிறுவன் மொஹமத் உமர் பைக்கை ஓட்ட, பில்லியனில் மொஹமத் அனாஸ் அமர்ந்திருந்தார். அப்போது நடைபெற்ற விபத்தால் சம்பவ இடத்திலேயே சிறுவன் மொஹமத் உமர் ஷேக் பலி ஆனான் இந்த விபத்தை நேரில் பார்த்தவர் கூறும்போது, அவர்கள் இருவரும் கே.டி.எம். டியூக் 390 பைக்கில்…

Read More

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அனில் கும்ப்ளே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் சபை தம்மீது நம்பிக்கை வைத்தமைக்கு தாம் கௌரவமடைந்ததாகவும், கடந்த ஒரு வருடத்தில் அடைந்த சாதனைகளுக்கு அணி தலைவர், வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அனைத்து பெருமைகளும் சென்றடையும் என கும்ப்ளே தெரிவித்துள்ளார். பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், அவர் தமது ட்விட்டர் தளத்தில் பதவி விலகியமைக்கான காரணத்தையும் வெளியிட்டிருந்தார். கிரிக்கெட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வழங்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள கும்ப்ளே, கிரிக்கெட் சபையின் நிர்வாகத்திற்கும், கிரிக்கெட் இரசிகர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Read More