9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை உயர்த்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புது பதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மாதத்தின் பிற்பகுதியில் காரியத் தடை, முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழத்தல், வீண் விரையங்கள், திடீர் பயணங்களால் சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பிற்பகுதியில் விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கல்யாணப்…

Read More

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளிலிருந்து நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். மனஇறுக்கம் விலகும். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வேற்றுமதத்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை அமையும். சகோதரிக்கும் திருமணம் கூடி வரும். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோன் பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்க வேண்டாம். அதற்கான வழிவகைகள் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தள்ளிப் போன அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அவ்வப்போது மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் வந்துப் போகும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். தந்தையாருக்கு கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அவருடன்…

Read More

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சாதனையாளர்களின் நட்பு கிடைக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் அடங்கும். புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தெலுங்கு, உருது பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். புது மனை புகும் அமைப்பு உருவாகும். மாதத்தின் மையப் பகுதியில் சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தந்தைவழியில் நன்மை உண்டாகும் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்…

Read More

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமூகமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப்…

Read More

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புதிதாக வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களேஸ நல்ல பதில் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேற்றுமொழி, மதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பிற்பகுதியில் செலவினங்கள் கூடிக்கொண்டேப் போகும். சில நேரங்களில் எதிர்காலத்தை நினைத்து சின்ன சின்ன…

Read More

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். அடிவயிற்றில் வலி, அலர்ஜி, இன்பெக்ஷன், இரத்த அழுத்தம் வரக்கூடும். அரசு காரியங்கள் தாமதமாகும். என்றாலும் ஓரளவு மனநிம்மதி உண்டாகும். அழகு, அறிவுக் கூடும். தள்ளிப் போன விஷயங்களை விரைந்து முடிப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கறாராகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். சகோதர ஒற்றுமை பலப்படும். மாதத்தின் மையப்பகுதியில் கொஞ்சம் மறதி, மந்தம், தூக்கமின்மை, விரக்தி வந்துச் செல்லும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையாப்பமிட்டு வைக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி…

Read More

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். முன்கோபம், வாக்குவாதங்கள், அலுப்பு, சலிப்பு, வெறுப்பு நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். அரசால் ஆதாயம் உண்டு. ஆனால் காது, மூக்கு, பல் வலி வரக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். வாகனம் புதிதாக…

Read More

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். ஆனால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை…

Read More

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி வந்துப் போகும். உங்களைப்…

Read More