கடக ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

கால நேரம் பார்க்காமல் எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும், கருத்துமாக இருப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வழக்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல விதத்தில் முடியும். மற்றவர்களை நம்பி ஏமாந்துப் போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும். ஆனால் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளை செய்து முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில நேரங்களில் கோபப்படுவீர்கள். சிலரின் சுயரூபத்தை அறிந்துக் கொண்டு வருத்தப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றிக் கெட்ட தனமாக நடந்துக் கொள்கிறார்கள் என்று…

Read More

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்கும் நீங்கள், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். நீண்ட காலப் பிரார்த்தனையை இப்போது நிறைவேற்றுவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்….

Read More

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாத நீங்கள், உழைப்பை நம்பி வாழ்வீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். குடும்ப வருமானம் உயரும். பழைய பெரிய பிரச்னைகள் தீரும். ஆனால் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். 13-ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், சொத்துப் பிரச்னைகள், பாகப் பிரிவினைகள் சாதகமாக முடியும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். 17ந் தேதி வரை 5-ம் வீட்டில் நிற்கும் சூரியனும், 14-ந் தேதி முதல்…

Read More

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத ஜோதிடப் பலன்கள்

மூட நம்பிக்கைகளை உடைத்தெறியும் நீங்கள், எதிலும் புதுமையை விரும்புவீர்கள். 17ந் தேதி வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 6&ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடனடியாக நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்த முன்கோபம், கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். 9&ந் தேதி வரை சுக்ரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை மாற்றம் செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். சரி செய்வீர்கள். ஆனால் 10&ந் தேதி முதல் சுக்ரன் 6&ல் சென்று மறைவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், கணவன்&மனைவிக்குள் சச்சரவுகள் வந்துச் செல்லும். புதன் 6&ல் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்…

Read More

மீன ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

பாசவலையில் சிக்குபவர்களே! ராசிநாதன் குருபகவான் 7-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை வரத் தொடங்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். இந்த மாதம் முழுக்க நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். வழக்கால் சில நெருக்கடிகள் ஏற்படக்கூடும். சகோதரங்களால் செலவுகள் வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும். புதன் சாதகமாக இருப்பதால் கல்யாணத் தடைகள் நீங்கும். ஷேர் மூலம்…

Read More

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

காக்காய் கழுகாகாது என்பதை அறிந்தவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. வாகன வசதிப் பெருகும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். ஷேர் பணம் தரும். உங்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதிர்ப்புகள் குறையும். குழந்தை பாக்யம் உண்டாகும். தாய்வழி உறவினர்கள் ஆதரிப்பார்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப மாற்றம் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். 14-ந் தேதி வரை 5-ல் சூரியன் நிற்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் சலசலப்பு வந்துப் போகும். மனைவிவழியில் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். 15-ந் தேதி முதல் அரசால் அனுகூலம் உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 11ம் தேதி வரை 5-ல் செவ்வாயும் நிற்பதால் எதையும் யோசித்து முடிவெடுங்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம்…

Read More

மகர ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

வீரியத்தை விட காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! 14-ந் தேதி வரை சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். பெரிய பதவி கூடி வரும். சொத்து வாங்குவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்ட வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். 11ம் தேதி வரை செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளிடம் இருந்து வந்த அலட்சியம், பிடிவாதம், முன்கோபம் பொறுப்பற்ற போக்கெல்லாம் விலகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மூத்த சகோதரங்களால் பயனடைவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள்…

Read More

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

வளைந்துக் கொடுக்கத் தெரியாதவர்களே! 26-ந் தேதி வரை கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் மாற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். செவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதரருடன் மனக்கசப்புகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் தடைகள் வந்து நீங்கும். எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்று தெரியாமல் தவிர்த்தீர்களே! இனி சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பாகப்பிரிவினை விஷயத்தில் அவசரம் வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் இதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். மனைவிவழியில் உதவிகளுண்டு. புது நட்பு மலரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குரு 10-ல் நிற்பதால் சின்ன சின்ன வீண்பழி வந்துப் போகும். எதிலும் தடுமாற்றம், தயக்கம் வந்துப் போகும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்….

Read More

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

நீதியின் பக்கம் நிற்பவர்களே! சுக்ரன் 8ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆனால் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டில் அமர்வதால் சச்சரவுகள் நீங்கி சமாதானம் உண்டாகும். சகோதரியுடன் இருந்த மனக்கசப்பு மாறும். சகோதரரால் ஏற்பட்ட நட்டங்கள் சரியாகும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வாய்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சவால்களில் வெற்றி கிட்டும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகான்கள், சாதுக்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். குரு 12-ல் நிற்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்…

Read More

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

கேள்விக் கணைத் தொடுப்பதில் வல்லவர்களே! ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள், தெள்ளத் தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் இவற்றையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசுப் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலைக் கிடைக்கும். அரசாங்கத்தால் சில சலுகைகளும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வழக்கில் ஜாமீன் கிடைக்கும். புது சொத்து…

Read More