தமிழ் க்ளவுட் இன் செய்தி ஒன்றுக்கு கிடைத்த சுவாரஸ்யமான கொமென்ட் இது

கடந்த தினத்தில் யாழ்ப்பாணத்தில் இளநீர் குடித்து அதன் பின்னர் அதன் அதீத விலையை கேட்டு அதிர்ந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டிருந்தோம். அந்த செய்தி வருமாறு… யாழ்ப்பாணத்தில் தாகம் காரணமாக இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் ஒருவர் அதன் பின்னர் தான் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் தனது சக ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த ஊழியர் நேற்றைய தினம் மதிய வேளையுடன் அரைநாள் விடுப்பு பெற்று வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் போது துரையப்பா விளையாட்டரங்கு வீதியும், யாழ் பழைய பொலீஸ்நிலைய சுற்றுவட்டத்தில் இருந்து துரையப்பா விளையாட்டரங்கு வீதியில் இணையும் வீதியும் சந்திக்கும் இடத்தில் டாடா பட்டா வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார். வெயிலின் தகிப்பும், தாகமும் அவ் அரச ஊழியரை தூண்டி விட, அவ் இளநீர் விற்கும் இடத்துக்கு சென்றவர் இளநீரை…

Read More

உங்கள் எதிரே இருப்பவரின் கண் அசைவை வைத்து அவர் மனதை அறிவது இப்படி தான்

கண் பேசும் வார்த்தையை புரிந்து கொள்வது என்பது உண்மையில் ஒரு விதமான திறமை என்றே சொல்லலாம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகள் வைத்து, மற்றவர்களின் கண்கள் என்ன சொல்கிறது என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம்… அது என்ன என்பதை பார்க்கலாம். கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. கண்கள் கீழே பார்த்தால் அடி பணிகிறது. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது… ஆசைப்படுகிறது. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது. கண்கள் படபடத்தால் விரும்புகிறது. வெட்கப்படுகிறது கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது. கண்கள்…

Read More

44 ஆண்டுகளுக்கு முன் இலங்கை – சில அரிய புகைப்படங்கள்

உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் தற்போது வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பார்க்கும் இடமெங்கும் வானை முட்டும் உயர்ந்த கட்டடங்களுடன் அழகாக இலங்கை காணப்படுகிறது. இந்நிலையில் 1973ம் ஆண்டில் இலங்கை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர் ஒருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகி உள்ளது. இலங்கை பெருமைப்படுத்தும் வகையில் பல பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த டன்கன் என்பவரே இந்த புகைபடங்களை எடுத்துள்ளார். அவரின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலாத் தளங்களில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்துத் திருமணத்தில் குங்குமம் எடுத்து கொடுத்த நாமல் ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அவருடைய நண்பனின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார். இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாமல் மணமக்களுக்கு அருகில் சென்று மணமகனுக்கு குங்குமம் எடுத்து கொடுத்துள்ளார். இந்து முறைப்படி திருமண வீட்டில் தாலி கட்டி முடிந்தவுடன் மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவது வழக்கம். அந்த வகையில் நாமலின் நண்பனான மணமகன், மணமகளுக்கு தாலி கட்டியதும் குங்குமம் வைக்கும் கிண்ணத்தை எடுத்து அவருடைய கைகளால் கொடுத்துள்ளார். மேலும், தனது நண்பன் கீத் திருமண பந்தத்தில் இணைவதையிட்டு தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க

Read More

1000 லிங்கங்களுக்கு அபிசேகம் செய்யும் இயற்கையின் அதிசயம்! – படங்கள் இணைப்பு

1000 சிவலிங்கங்களுக்கு இயற்கையே அபிசேகம் செய்யும் அற்புதக் காட்சி கர்நாடக மாநிலத்தின் பகுதியில் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றில் உள்ளது. இயற்கையே 1000 சிவலிங்கங்களுக்கு நீர் அபிஷேகம் செய்யும் அதிசயம் நடக்கின்றது. பொதுவாக, தானாக தோன்றும் சிவலிங்கங்களை இந்துக்கள் சுயம்பு லிங்கம் என்று கூறுவார்கள். ஆனால் ஒரே இடத்தில் காணப்படும் 1000 லிங்கங்களும் தானாகவே தோன்றி உள்ளனவா? அல்லது யாரேனும் உருவாக்கினார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு ஒரே இடத்தில் 1000 சிவலிங்கங்கள் காணப்படும் காட்சி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீரோட்டம் உள்ள பகுதிகளில் தான் இந்த லிங்கங்கள் அனைத்தும் உள்ளன. ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுப்பதாக உள்ளது. கர்நாடக மாநிலத்தின் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றிலேயே இந்த 1000 லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த…

Read More

ஒருவருக்கு மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள்!

நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி என ஒன்று இருக்கிறதா? என பலவன கூறப்பட்டுள்ளன. இவை எல்லாம் உண்மையா? பொய்யா? கட்டுக்கதையா? வெறும் கதையா? என இன்றளவும் பல மேடைகளில் தலைப்பாக கொண்டு பேசப்படுகின்றன. 50:50 இதை உண்மை என்றும் பொய் என்றும் கூறி தான் வருகிறார்கள். மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம். வாய், காது மற்றும் கண்…

Read More

இலங்கையில் தோன்றிய சந்திரகிரகணத்தின் புகைப்படங்கள் வெளியானது

கடந்த 7ஆம் திகதி இரவு வானில் தோன்றிய சந்திரகிரகணம், உலகம் முழுவதும் பல நாடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையிலும் சில பகுதிகளில் மக்களால் சந்திரகிரகணம் அவதானிக்க முடிந்துள்ளது. அம்பாறை பிரதேசத்திலுள்ள மக்களுக்கு சந்திரகிரகணம் அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் சந்திரனின் பகுதி ஒன்று மறைந்து செல்லும் காட்சியினை தெளிவாக காண முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More

உங்களுக்கு பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா??

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பல அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில் பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள் வருவதற்கும் பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் இம்மாதிரியான கனவுகள் வருவதற்கு, பாலியல் மீது அலாதியான ஆர்வம் இல்லை. அது சிலரை சுற்றி நடக்கும் நுட்பமான உளவியல் மாற்றங்களாகக் கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாலியல் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம்? கனவில் தங்களது காதலை வெளிப்படுத்துமாறு வந்தால், அது நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஈடுபடப் போகும் காரியங்கள் வெற்றி அடையப் போகிறது என்று அரத்தமாம். சிலருக்கு அவர்களின் முன்னாள் துணையின் உடலுறவு பற்றி கனவு வந்தால், அது அவர்களின் உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். கனவில் கருத்தரிப்பது போன்று வந்தால், அது உங்கள் வாழ்வு அல்லது உறவில் நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்பதன்…

Read More

300 ஆண்டுகள் வாழக்கூடிய அரிய வகை உயிரினம் கண்டுபிடிப்பு!! – படங்கள் இணைப்பு

உலகிலேயே அதிக ஆயுள் கொண்ட உரிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் சுமார் 300 ஆண்டுகள் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆயுட்காலத்தை கொண்ட உயிரினங்களாக ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்த நிலையில் குழாயுருவான புழுக்கள் (Tube Worms) 300 ஆண்டுகள் வாழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவை மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் காணப்புகின்றன. இதற்கு முன்னர் Galapagos என்ற ராட்சத ஆமை 177 வருடங்களும், Bowhead எனும் திமிங்கிலம் 211 வருடங்களும் அதிகபட்சமாக வாழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் பூனை ஒன்றை பாதுகாக்கும் நாய்! நெகிழ வைக்கும் தாய்ப்பாசம்

பிறந்தவுடன் குழந்தைகளை குப்பையில் வீசும் தாய்களை கொண்ட இந்த யுகத்தில் தனது இனத்திற்கு சொந்தமற்ற தாய் இல்லாத பூனைக்கு நாய் ஒன்று தாயாகியுள்ளது. இந்த நாய், பூனைக்கு பால் கொடுத்து வளர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய் பாசத்திற்கு ஏங்கும் பூனை இந்த நாயிடம் பால் குடிக்கும் காட்சி பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்ணீரை வரவைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கத்தேகம பகுதியை சேர்ந்த சீதா வாசலகே என்பவரின் வீட்டிலேயே இந்த காட்சியை காண முடிந்துள்ளது.

Read More