வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விசாகப் பொங்கல் விழா – படங்கள் இணைப்பு

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் குறித்த பொங்கல் விழாவிற்கு ஏராளமான பக்த அடியார்கள் வருகைதந்துள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை தொடக்கம் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை அடியவர்கள் தமது பல்வேறு நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் குறித்த வைகாசி விசாகப் பொங்கல் நாளை அதிகாலை வரைக்கும் தொடர்ந்து நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

Read More

மனதை கனமாக்கும் சிரியாவின் போருக்கு முந்தைய, பிந்தைய புகைப்படங்கள்

அலெப்போ, சிரியாவின் மிகப்பெரிய நகரம். போரின் போது வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டார்கள். இந் நகரத்தின் போருக்கு முந்தைய, பிந்தைய புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவை போரின் கொடுமையை தெளிவாக விளக்கி நிற்கின்றன.

Read More

உலக அன்னையர் தினத்துக்காக பாடல் வெளியிட்ட ஈழத்து பெண் ஜெசிகா

உலகிலுள்ள அனைத்து அன்னையர்களையும் போற்றும் நாளான “அன்னையர் தினம்” இன்று அனைவராலும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்காகவும் “உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே…” என்ற பாடலை ஈழத்துச்சிறுமி ஒருவர் சமர்ப்பணமாக வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் கனடா வாழ் ஈழத்துச் பெண் ஜெசிகா (Jessica Judes) இரண்டாவது இடம் பிடித்தார். அவரே “உயிரும் நீயே, உடலும் நீயே…” என்ற பாடலை அன்னையர் தினத்துக்காக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் சிறப்பாக செயற்படும் “ஸ்மார்ட்” வகுப்பறை

கல்வியில் தனக்கென ஓர் பாரம்பரியத்தை பேணிவரும் கல்லூரியாக யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி விளங்குகின்றது. வடமராட்சியில் பல கல்விமான்களை உருவாக்கிய சாதனை இக் கல்லூரிக்கு உரித்தானது. குடா நாட்டு பாடசாலைகளில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் இக் கல்லூரி முன்னோடியாக விளங்குகின்றது. இக் கல்லூரியில் தற்போது அதிபராக கடமைபுரியும் திரு.கிருஷ்ணகுமார் அவர்களின் முயற்சிகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந் நிலையில் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் கொண்டுசெல்லும் வகையில் பழைய மாணவரின் நிதி உதவியுடன் “ஸ்மார்ட்” வகுப்பறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்லூடக கருவிகள் பல கொண்டுள்ள இவ் வகுப்பறையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்லூடக ஒளித்தெறிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் மொத்த 8 பாடவேளைகளும் இவ் வகுப்பறையை பயன்படுத்தும் வகையில் நேரசூசி வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். கீழுள்ள காணொளியில் ஸ்மார்ட் வகுப்பறையின் தொழிற்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More