இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய டாட்டூ

நயன்தாரா தற்போதெல்லாம் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகின்றார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்தநாளுக்கு கூட அமெரிக்காவில் இருவரும் கொண்டாடினர், இந்நிலையில் நயன்தாரா கையில் தற்போது புதிய டாட்டூ ஒன்று உள்ளது. இதற்கு முன் அதில் தன் முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயர் இருந்தது, தற்போது அதை அப்படியே Positivity என்று மாற்றிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. காதல் தோல்வியை கூட Positivity -யாக மாற்றிய நயன்தாரா என ரசிகர்கள் புகழ்ந்தும் வருகின்றனர்.

Read More

தனது மனைவியின் கள்ளத்தொடர்பை வெளியிட்ட நடிகர் தாடி பாலாஜி

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நிறைய புகார்கள் கொடுத்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தாடி பாலாஜி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனது மனைவி நித்யாவுக்கு, பைசல் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறினார். தமிழ்நாடு காவல்துறை மாநில குற்றஆவண காப்பகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், பைசலுடன் சேர்ந்து கொண்டு, தமது மனைவி விவகாரத்தில் தலையிடக் கூடாது எனக் கூறி தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாலாஜி புகார் கூறியுள்ளார். இந்நிலையில் காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுக்கும் குரல் பதிவை பொலிசாரிடம் கொடுத்துள்ளதாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Read More

பிரபல இலங்கை நடிகர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல இலங்கை நடிகர் தசுன் நிஷான் டி சில்வா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ள தசுன், பல இசை காணொளிகளிலும் நடித்துள்ளார். பிரபல கலைஞரான தசுன் தனிப்பட்ட காரணத்திற்காக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பல பாத்திரங்களில் நடித்துள்ள இவர் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கலைஞராவார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடித்து வந்த தசுன் தான் தங்கியிருந்த அறையில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உயிரிழக்கும் போது அவரது உறவினர்கள் எவரும் அருகில் இருக்கவில்லை. தசுன் தான் காதலித்த பெண்ணுடன் பதிவு திருமணமும் செய்திருந்தார். மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Read More

விஜய் இன் மெர்சல் படத்தை பார்க்க ஆவலாக உள்ள நாமல்

விஜயின் மெர்சல் டீசரை பார்த்து தாம் மகிழ்ச்சி அடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இளைய தளபதி விஜயின் மெர்சல் திரைப்பட டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைப் பார்த்து தாம் மகிழ்ச்சியடைந்ததாக நாமல் ராஜபக்ஷ, தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில புதிய பாடல்களைக் கேட்கவும் தாம் ஆவலாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

ஆண்கள் மலசல கூடத்துக்குள் புகுந்து செல்பி எடுத்த கஜால்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலமாகப் பலரும் இதுவரை பிரபலமாகியுள்ளனர். இந்தி, தெலுங்கு பிக்பாஸ்களில் கலந்துகொண்டு அதனால் படங்களில் நிறைய வாய்ப்பு கிடைத்தவர்கள் ஏராளம். அந்த வகையில் படங்களிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்துகொண்டார். இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். தியேட்டர் ஒன்றின் ஆண்கள் டாய்லெட்டில் செல்ஃபி எடுத்துள்ளார். ‘நான் ஏன் இன்னிக்கு இங்கே இருக்கேன்?’ கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்…’ என ரசிகர்களை யூகிக்கச் சொல்லிக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Read More

விஜய் ரீவி தொகுப்பாளினி DD இன் விநோத புகைப்படம் ஒன்று பரவி வருகிறது

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அதிக ரசிகர்களை பெற்றுள்ள டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. சின்னத்திரையிலிருந்து பவர் பாண்டி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார். மாதவன் நடித்த நளதமயந்தி உள்பட ஒரு சில படங்களில் நடித்திருந்தார். படத்தில் சின்னதாக ஒரு ரோல் பண்ணியிருந்தாலும் பலரும் பாராட்டும் வகையில் அவரது நடிப்பு இருப்பது பாராட்டுதலுக்குறியது. இந்த நிலையில், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத வகையில், வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

உங்களுக்கு இதுவரை ஓசியில் தமிழ் படங்களை தந்த தமிழ்ரொக்கர்ஸ் இவர்கள் தான்

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் ஆகிய இணையதளங்களின் நிர்வாகிகளின் புகைப்படங்களை தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. தமிழில் எந்த புதிய படங்கள் வெளிவந்தாலும் அதை திருட்டுத்தனமாக, படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் உள்ளிட்ட இணையதளங்கள் வெளியிட்டு வந்தன. இது தமிழ் சினிமா உலகினருக்கு பெரிய தலைவலியாக இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பின், திருட்டுத்தனமாக தமிழ் படங்களை இணையத்தில் வெளியிடுபவர்களை கண்டுபிடிக்க குழு ஒன்றை அமைத்தார். அதன் விளைவாக வேலூரை சேர்ந்த கௌரிசங்கர்(24) என்ற வாலிபர் சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர்தான் தமிழ்கன் இணையத்தின் அட்மின் என செய்திகள் வெளியானது. அதே நேரம், அவர் எங்கள் அட்மின் அல்ல என தமிழ்கன் இணையத்தின் சார்பாக செய்தியும் வெளியிடப்பட்டது. இது…

Read More

ஜிமிக்கி கம்மல் பாடலின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?

அண்மையில் வெளிவந்த ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளப் பாடலைக் கேட்காத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு அந்தப் பாடல் பிரபலம்பெற்றுவிட்டது. தமிழ்ச்சினிமாவில் முக்கியமான கதா நாயகர்களின் டீசர், ட்ரைலர் போன்றவற்றுக்கு நிகரான வரவேற்பை அந்த ஒரு பாடலுக்கு தமிழர்கள் முக்கியம் கொடுத்ததுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. தாம் கேட்கும் அந்த மொழி தெரியாத பாடலை அதன் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் முக்கியத்துவம்கொடுத்துப் பார்த்தும் கேட்டுமிருக்கிறார்களெனில் அதில் ஒரு ஈர்ப்பு இல்லாமல் இல்லை. ஆனால், உண்மையில் அதன் அர்த்தம் என்பது தமிழரின் பண்பாட்டோடு ஒத்துப்போகாத ஒன்று என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டிலர். கேரளாவில் உருவாக்கப்பட்ட அந்தப் பாடலுக்கும் ஆடலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவுதூரம்வரை தூக்கிவிட்ட எண்பதுவீதமான பங்கும் தமிழர்களைத்தான் சாரும். சரி அந்த பாடலின் முன் இரண்டு வரிகளதும் அர்த்தம் என்னவென்று பார்ப்போம், ”என்டம்மெட ஜிமிக்கி கம்மல்! என்டப்பன்…

Read More

ஒரு மாதத்துக்குள் ஒரு கோடியைத் தாண்டிய விஜய் பாட்டு

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்று பாடல் ஒன்று, ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் லிரிக் வீடியோ, கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வீடியோ, இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Read More

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்குமார்

அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். எந்த ஒரு இடத்தில் அவருடைய ரசிகர்கள் அஜித்தை கைவிட்டது இல்லை. இந்நிலையில் அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Read More