கொட்டாவை யுவதியின் மர்மக் கொலைக்கான காரணம் வெளியானது

கொட்டாவை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதியொருவரை கொலை செய்தமைக்கான காரணம் காதல் விவகாரம் என காவற்துறை சந்தேக்கிறது. கொட்டாவை – ஹொரணை பாதையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் இருந்து நேற்று மாலை குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 29 வயதான யுவதியொருவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதியின் சடலத்தை முதன்முதலில் பாடசாலை சென்று வீடு திரும்பிய அவரின் சகோதரர் கண்டுள்ளார். அந்த யுவதி மாத்தறையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டுவந்ததாகவும், பின்னர் காதலில் பிரச்சினை உருவானதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த இளைஞர் நேற்று முன்தினம் அவரை காணவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே இந்த கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹோமாகம காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – படங்கள் இணைப்பு

இராவணாகொடையிலிந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி போக்குவரத்து சமிக்ஞை கம்பம் ஒன்றில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராவணாகொடையிலிருந்து பயணிகளை ஏற்றி புறப்பட்டு சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

க.பொ.த உயர்தர மாணவியின் நிர்வாண படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த 23 வயது இளைஞன்

உயர் தரத்தில் பயிலும் பாடசாலை மாணவியை அச்சுறுத்தி பணம் பெற்று வந்த 23 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த மாணவியை காதலித்து வந்த நபர் பின்னர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். மாணவியை காதலிக்கும் போது ஸ்கைப் மூலம் மாணவியின் நிர்வாணப் படங்களையும், வீடியோவையும் பெற்றுக்கொண்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவியின் படங்களை குறித்த நபர் அடிக்கடி ஸ்கைப் மூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட நபர், தன்னிடம் இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி பணம் கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி வீட்டில் பணத்தை திருடி சந்தேக நபருக்கு கொடுத்து வந்துள்ளார். இது நீண்டகாலமாக தொடர்ந்து வந்துள்ளது. உயர் பதவியில் இருந்து மாணவியின் தந்தையின் பணம் பெருமளவில்…

Read More

பரிகார பூஜை செய்ய வந்த மந்திரவாதி பாடசாலை மாணவிக்கு செய்த காரியம்

வீடொன்றில் பரிகார பூஜை செய்ய சென்ற மந்திரவாதி ஒருவர் அந்த வீட்டை சேர்ந்த பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை சந்தேக நபர் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலவ்வ – ஹூம்புலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பரிகார பூஜை செய்ய மந்திரவாதியும் அவரது உதவியாளரும் கம்பளை பிரதேசத்தில் இருந்து வந்துள்ளனர். வீட்டில் இரவில் நடத்தும் பரிகார பூஜைக்கு தேவையான ஊது பத்தியை கொள்வனவு செய்ய கடைக்கு செல்வதாக கூறி, மாணவியையும் 4 வயது சிறுவனை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றுள்ளனர். அலவ்வ – கிரிஹூல்ல வீதியில் மல்லேவ பிரதேசத்தில் காட்டு பகுதி ஒன்றுக்கு அருகில் குறுக்கு வீதிக்கு அழைத்துச் சென்று மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும்…

Read More

இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொட்டாவ இளம் பெண்

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றின் மேல் மாடியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 26 வயதான தரிந்தி ஆலோக்கா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் தொடர்பு காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் சடலத்தை பாடசாலை சென்று வீடு திரும்பிய அவரது சகோதரியே முதல் முறையாக அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

பொத்துவில் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றல்

பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொத்துவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டி விபத்து – படங்கள் இணைப்பு

லிந்துலையில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியதில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தலவாக்கலை – டயகம பிரதான வீதியில், லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது படுங்காயங்களுக்குள்ளாகிய நால்வரும் சிகிச்சைகளுக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சி.வி.விக்னேஸ்வரன் வேடமிட்டு வேட்டையாடிய விநோத சிறுவன் – படம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரன் வேடமிட்டு வேட்டையாடிய விநோத சிறுவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் ஆலயம் ஒன்றில் வேட்டை திருவிழா இடம்பெற்றுள்ளது. இங்கு வேட்டையாடிய சிறுவர்களில் விக்கினேஸ்வரனின் வேடம் அணிந்து வேட்டையாடிய சிறுவன் ஒருவன் அடியார்கள் எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினான். அச் சிறுவன் தனது உடலில் “தமிழின அடையாளம் விக்கி ஐயா” என மையினால் எழுதியிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

Read More

கொழும்பில் 24 வயது இளம் பெண்ணை இரவு முழுவதும் வசியம் செய்த 21 வயது இளைஞர் கைது

வயது மூத்த பெண்ணின் காதலை பெறுவதற்காக அவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம் செய்த 21 வயதுடைய இளைஞர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த இளம் பெண் தொழிலுக்காக கொழும்பிற்கு சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள பிரதேசம் ஒன்றில் தங்கியுள்ளார். தொழிலுக்கு செல்லும் போது அந்த பெண் குறித்த இளைஞரை சந்தித்துள்ளார். சிறிது காலம் செல்லும் போது இருவரும் காதலில் சிக்கியுள்ளனர். நிரந்தர தொழில் இல்லாத இளைஞர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தங்க நகைகளை பெற்றுக் அடகு வைத்துள்ளார். இந்த செயற்பாடு தொடர்ந்த நிலையில், தனது காதலை முறித்துக் கொள்ள குறித்த பெண் தீர்மானித்துள்ளார். காதலியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மந்திரவாதி ஒருவரை…

Read More

பெண்ணின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்

பெண்ணொருவரை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்டை, அந்த பெண் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, பொலிஸ் சார்ஜன்டை சம்பந்தப்பட்ட பெண் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப்பிட்டிகொல்லவா ஹதகல, ரலபனா என்ற பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ் நற்சான்று அறிக்கையை பெற கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் தலைமையகத்திற்கு சென்றுள்ளார். பொலிஸ் பொதுமக்கள் தொடர்பு பிரிவுக்கு சென்று பொலிஸ் சார்ஜன்டை சந்தித்துள்ளார். அறிக்கையை பின்னர் தருவதாக பொலிஸ் சார்ஜன்ட் கூறியுள்ளார். இதன் பின்னர், பெண்ணின் வீட்டுக்கு இன்று சென்ற பொலிஸ் சார்ஜன்ட் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க பெண் அவரை பொல்லால் தாக்கியுள்ளதுடன் தொலைபேசியில் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளார்….

Read More