யாழ்ப்பாண பாடசாலையில் புகுந்த பெண்ணால் அதிபருக்கு ஏற்பட்ட நிலை

யாழ். நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த பெண் ஒருவர், குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றும் தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்ட முற்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர். அதிபராக கடமையாற்றும் குறித்த நபர் சில தினங்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இதனால், கணவரான குறித்த நபரை தேடி அந்த பெண் பாடசாலைக்கு வந்துள்ளார். இதன் போது அதிபர் அலுவலகத்துக்கு சென்ற பெண், தனது உடமையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை அதிபரான கணவர் மீது ஊற்றியதுடன், தன் மீதும் ஊற்றிக்கொண்டு எரியூட்ட முற்பட்டுள்ளார். இதனால் பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், சக ஆசிரியர்கள் தலையிட்டு குறித்த பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

Read More

யோசனை கூறிய காதலியின் மூக்கை பெயர்த்த காதலன்

திருமணத்தை பிற்போட யோசனை முன்வைத்த காதலியை தாக்கிய காதலன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தில் குமார் என்ற நபருக்கே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் திருமணம் நடத்தபட இருந்த நிலையில் திருமணத்தை பிற்போட யோசனை முன்வைத்த நிலையில் காதலன் தன்னை தாக்கியதாக 20 வயதான காதலியொருவர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில் காதலன் அடித்ததால் தனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், காதலன் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றில் சந்தேகநபர் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் கடுமையாக எச்சரித்து, 50,000 ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளார்.

Read More

விபச்சார அழகிகளுக்கு அடிமையாகிய நபர் செய்த செயல்

மூடப்பட்டுள்ள வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பெறுமதியான பொருட்களை திருடும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நவகமுவ, ரணாகல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு திருடப்படும் பொருட்களின் மூலம் கிடைக்கும் பணத்தை கசினா விளையாடுவதற்கும், பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கும் செலவிட்டுள்ளார். மனைவியை பிரிந்த குறித்த நபர், ராகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு தான் அங்கு வாழ்வதாக பலரையும் நம்ப வைத்துள்ளார். எனினும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் அறை ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கிருந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். காலை நேரங்களில் தொழிலுக்கு செல்வதனை போன்று நடந்து சென்று மூடியிருக்கும் வீடுகளை தட்டி அங்கு யாரேனும் உள்ளார்களா என்பதனை உறுதி செய்து கொள்வார். அப்படி யாராவது இருந்தால் போலி விலாசம் தொடர்பில் தகவல் கேட்பதை போன்று பாசாங்கு செய்வார். அப்படி…

Read More

உரும்பிராயில் அதிக சீதனம் பெற்ற தங்கையால், அக்காவுக்கு அடி உதை

யாழ். உரும்பிராய் பகுதியில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுக்கப்பட்டதால் கணவன் ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். உரும்பிராய் பகுதியில் பிரபல வர்த்தகரின் இரு மகள்களில் இளைய மகளுக்கு கூடுதலான பணம் மற்றும் நகைகள், வீடு போன்றவற்றை சீதனமாக கொடுத்து அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் அக்காவின் கணவரும் ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார். தனது மனைவியின் தங்கைக்கு தனக்கு கொடுத்ததை விட அதிக அளவு சீதனம் கொடுத்து திருமணம் நடத்த முற்பட்டபோது குறித்த கணவன் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். எனினும் இவரது பேச்சுக்கு அங்கு இடம் இல்லாமல் போகவே அவருக்கு கொடுக்கப்பட்டதை…

Read More

போத்தலில் தானே பெற்றோல் நிரப்பமாட்டாய்… இதில் நிரப்பு – இலங்கையில் சுவாரஸ்யம்

நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன.

Read More

இலங்கையில் கட்டிப்பிடித்த இளைஞனால் இளம்பெண்ணுக்கு கிடைத்த பத்தாயிரம் ரூபா

நீரோடையில் குளித்­துக் கொ ண் ­டி­ருந்த இளம் பெண்ணை, கட்­டி­ய­ணைத்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னுக்கு கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யும், தண்­ட­மும் விதித்து, பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு இழப்­பீ­டும் வழங்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார். பிபிலை நீதி­மன்­றில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போதே, நீதி­வான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளார். நீரோ­டை­யில் குளித்­துக் கொண்­டி­ருந்த இளம் பெண்ணை, அந்­தப் பெண்­ணைக் காத­லிப்­ப­தா­கத் தெரி­விக்­கும் இளை­ஞன் கட்­டி­ய­ணைத்­தமை குறித்து, பிபி­லைப் பொலி­ஸாரால் இளை­ஞ­னுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இளை­ஞ­னுக்கு ஆயி­ரத்து ஐநூறு ரூபா தண்­ட­மும், பாதிக் ­கப்­பட்ட பெண்­ணுக்கு 10 ஆயி­ ரம் ரூபா இழப்­பீ­டும் வழங்­கு­மா­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

Read More

மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகளின் அறைக்குள் நுழைந்த பிஞ்சில் பழுத்த சிறுவன்

மட்டக்களப்பில் பல்கலைக்கழ மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் பிரவேசித்து அவர்களின் உடமைகளை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் சிறுவன் ஒருவருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி பிணை வழங்கியுள்ளார். குறித்த சிறுவன் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போhதே ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் குறித்த சிறுவனை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் பிரவேசித்து பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையிட்ட சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் மாணவிகள் சிலர் வீடொன்றினை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு சென்று தங்கிருந்த அறைக்கு வருகை தந்த போது தங்கியிருந்த வீட்டின்…

Read More

யாழ்ப்பாணம் இளவாளையில் மனைவியின் கள்ளக் காதலனுக்கு கணவன் கொடுத்த பரிசு

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் மனைவியுடன் முறையற்ற உறவு வைத்துக் கொண்ட நபர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவியுடன், முறையற்ற உறவு வைத்துக் கொண்டதால் குறித்த பெண்ணின் கணவன் நேற்றைய தினம்(29) தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, தாக்குதல் நடத்திய பெண்ணின் கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

இலங்கையில் பாலியல் அருவருப்பு சம்பவம் – பெண்ணுக்கு 21 ஆண்டு சிறை

மகன் முறையான சிறுவன் ஒருவனை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய சித்தியொருவருக்கு அனுராதபுரம் உயர் நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பதினைந்த வயதான சிறுவன் ஒருவனே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளான். சிறுவனை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக குறித்த பெண்ணுக்கு 21 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஏழாண்டு சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் 21 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் இந்த தண்டனையை விதித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி மற்றும் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 31ம் திகதி ஆகியனவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த சிறுவன்,…

Read More

உயிர் நண்பன் என்ற பெயரில் இருக்கும் துரோகிகள் ஜாக்கிரதை – யாழ்ப்பாண சம்பவம்

பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ் குடாநாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவன், மனைவி, மூன்று பிள்ளைகள் இவ்வாறு விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையில் பகுதியில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். 28 வயதான தாயாரும் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு வயதான பிள்ளைகளின் சடலங்களுமே மீட்கப்பட்டுள்ளன. ஐஸ்கிரிமில் விஷம் கலந்து பருகிய நிலையில் இந்த 4 பேரும் உயிரிழந்தனர். பெருந்தொகை பணத்தை நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த நிலையில், அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக இன்று தற்கொலை செய்த பெண்ணின் கணவன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தற்கொலை செய்துள்ளார். ஒரு கோடி 17 லட்சம் ரூபாய் பணத்தை நெருக்கமான…

Read More