‘பாலியல் விருப்பமற்றவர்’ என்ற ஒன்று உள்ளது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?

மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது. அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்: உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன். என்னுடைய நண்பர்கள் அவர்களுடைய ஆண் நண்பர்கள், அவர்கள் உடலுறவு கொள்ள விரும்பும் நட்சத்திரங்கள் குறித்து பேசுவார்கள். ஆனால், எனக்கு அவ்வாறான யோசனை எப்போதும்…

Read More

இலங்கையில் கள்ளக் காதலனால் கொல்லப்பட்ட 27 வயதுடைய இளம் தாய்

ஹம்பாந்தொடை – திமுதக போஷித எல பிரதேசத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. வீர்கொடி குருசங்கலாகெ இரேஷா ஷமாலி எனும் 27 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண்ணை அவரது கணவர் விட்டுச் சென்றுள்ள நிலையில், இளம் பெண் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். பெண்ணின் கள்ளக் காதலன் பெண்ணை கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கொலைக்கான காரணங்கள் இதுவரையில் அறிப்படாததுடன், சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை ஹம்பாந்தொடை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஹம்பாந்தொடை காவற்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது.

Read More

குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக போராடும் இளம்பெண்

ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார். காவல்துறையினர் இந்த வழக்கை மூடிய நிலையில், வழக்கு விசாரணையை மீண்டும் தொடர ஜினா மனு ஒன்றினை போட்டுள்ளார். இதற்காகத் தான் நடத்திய போராட்டத்தினை விளக்குகிறார் ஜினா. ஜூலை 8, 2017-ம் ஆண்டு லண்டனின் ஹைட் பார்க்கில் நடந்த இசை திருவிழாற்கு நானும் எனது சகோதரியும் சென்றிருந்தோம். பெரும் கூட்டத்திற்கு நடுவில், இசை கொண்டாட்டத்திற்காக காத்திருந்தோம். எங்களது அருகில் வந்த இரண்டு நபர்கள், எங்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். அதில், கருமை நிற முடி கொண்ட ஒருவன் என்னை மேலும் கீழுமாக பார்த்ததுடன், என்னைப் பற்றி அவனது நண்பனிடம் கூறி நகைத்தான்….

Read More

நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! எண்ணெய் களஞ்சிய அறைக்குள் நுழைந்த இராணுவத்தினர்

கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய கட்டிட தொகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளனர். இந்த புதிய சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைக்காக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் கொலன்னாவ எல்லைக்குள் இராணுவத்தினர் நுழைந்துள்ளனர். இதன்போது பாதுகாப்பு கதவுகளை மூடிவிட்டு ஊழியர்கள் குழப்பம் ஏற்படுத்தியமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பெற்றோலிய ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

Read More

`அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது’

ரோஷ்னி, 22 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (BBC இல் தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் நான்காம் பகுதி.) குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமும், குறும்பும் நிறைந்தது. சிரித்து கலகலப்பாக இருக்கவேண்டிய அந்தப் பருவத்தில் சந்தித்த ஓர் அசம்பாவிதம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. பல ஆண்டுகள் ஆனபோதிலும், அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் ஏற்பட்ட மனத்தடைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன். விளைவு? அன்பு, உறவுகள், திருமணம் என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது. எனக்கு 11-12 வயது இருக்கும்போது, வெளியூரில் இருந்து படிப்பதற்காக வந்த அவன், பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான். என் குடும்பத்தினருக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம், அவனை முழுமையாக நம்பினார்கள். நானும், என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியும் அவனிடம் டியூஷன் படித்தோம். டெஸ்டில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற என்னை, ஒரு…

Read More

விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து மடியில் வைத்துக் கொண்டான். எனது உள்ளாடைக்குள்… -அதிர்ச்சி சம்பவம்

எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது, ஒரு பையன் என்னை தவறான எண்ணத்துடன் சீண்டினான். அதற்கு முன்பு, ஆண் அல்லது பெண்ணின் தொடுதலில் வித்தியாசம் இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது.’ தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் இரண்டாம் பகுதி. இவ்வளவு பழைய சம்பவம் எப்படி நினைவில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதுபோன்ற தவறான தொடுகைகள், மனதில் பசுமரத்தாணியாக வடுக்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், தவறு செய்தவனுக்கு இதுகுறித்த நினைவோ அல்லது குற்ற உணர்வோ இருக்குமா? சிறுமியான எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த பையன் என்னை கட்டாயப்படுத்தினான். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை. எதோ தவறாக நடக்கிறது என்று மட்டுமே புரிந்தது. நான் அண்ணா என்று அழைத்த அவன் அப்போது ஆறாவதோ அல்லது ஏழாவது வகுப்போ படித்துக்…

Read More

8 வயதில் திருமணம், பருவ வயதில் வயல்வெளி; தடை பல கடந்து மருத்துவக் கல்லூரியை நோக்கி…

ரூபா யாதவுக்கு எட்டு வயதிலேயே திருமணமாகிவிட்டது. புகுந்த வீட்டினரும், கணவரும் கொடுத்த உற்சாகத்தினால் கல்வி பயின்ற அவர், தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 720க்கு 603 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அகில இந்திய அளவில் 2283வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரூபா யாதவ். இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் சோமுவில், நிவாணா கிராமத்தை சேர்ந்த ரூபா யாதவின் மூத்த சகோதரிக்கு, திருமணம் முடித்த குடும்பத்திலேயே ரூபாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரூபாவின் வயது எட்டு. ரூபாவின் குடும்பத்தினர் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். ரூபாவின் டாக்டர் கனவுக்கு உரம் போட்டு வளர்த்தார் கணவர் ஷங்கர் யாதவ். இரண்டு மூத்த சகோதரிகளைக் கொண்ட ரூபாவுக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது நாட்டம் அதிகமாக இருந்தது. எட்டு வயதிலேயே பால்யத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை பிறந்த வீட்டிலேயே…

Read More

அமெரிக்காவில் நுழைய ஆஃப்கனின் ரோபோட்டிக் முஸ்லீம் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஃப்கன் நாட்டை சேர்ந்த முற்றிலும் மாணவிகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு ரோபோட்டிக் வல்லுனர் குழு தங்கள் படைப்பு ஒரு போட்டியில் கலந்து கொள்வதை ஸ்கைப் மூலம் காணவுள்ளனர். அதிபர் டிரம்ப் சமீபத்தில் ஆறு இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தார். ஆனால் அப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் இல்லை. போட்டியில் பங்கேற்பதற்கான பட்டியலில் இடம்பெற்ற இரான், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகளுக்கு அமெரிக்காவினுள் நுழைய அனுமதி தரப்பட்டது. தனிப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விவாதிக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் நகரில் இருந்துகொண்டு, வாஷிங்டனில் நடைபெற்ற போட்டியில், பந்துகளை வகைப்படுத்திப் பிரிக்கும் தங்கள் ரோபோ பங்கேற்றதை அந்த ஆறு மாணவிகள் கொண்ட குழு காணொளி…

Read More

ரொஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் வன்முறை: இலங்கை காவலருக்கு விளக்க மறியல்

இலங்கையில் சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவர் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரான போலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபரை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு போலிஸாருக்கு நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரனி ஷிராஸ் நூர்தீன் கூறுகின்றார். தலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்….

Read More