`அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது’

ரோஷ்னி, 22 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (BBC இல் தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் நான்காம் பகுதி.) குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமும், குறும்பும் நிறைந்தது. சிரித்து கலகலப்பாக இருக்கவேண்டிய அந்தப் பருவத்தில் சந்தித்த ஓர் அசம்பாவிதம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. பல ஆண்டுகள் ஆனபோதிலும், அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் ஏற்பட்ட மனத்தடைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன். விளைவு? அன்பு, உறவுகள், திருமணம் என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது. எனக்கு 11-12 வயது இருக்கும்போது, வெளியூரில் இருந்து படிப்பதற்காக வந்த அவன், பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான். என் குடும்பத்தினருக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம், அவனை முழுமையாக நம்பினார்கள். நானும், என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியும் அவனிடம் டியூஷன் படித்தோம். டெஸ்டில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற என்னை, ஒரு…

Read More

நீதிபதி இளஞ்செழியனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

துணிச்சல் மிகு நீதிபதி என்னும் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். செம்மணிப் படுகொலை வழக்கு அவரின் துணிச்சலான செயற்பாட்டை புடம்போட்டுக் காட்டியிருந்தது. வடக்கில் வன்முறைச் சம்பவங்களும், அடிதடிகளும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க, அவற்றை தன்னுடைய அதிரடி தீர்ப்புக்களாலும், உத்தரவுகளாலும் தடுத்து நிறுத்தவும், மக்களின் நம்பிக்கைக்கும் வழி வகுத்திருந்தார். இன்று அவரை இலக்கு வைப்பதற்கும் அவை தான் காரணமாக இருக்கின்றன. செம்மணியில் யாரால் படுகொலை நடத்தப்பட்டதோ அவர்களைக் கொண்டே அதனை தோண்டுவதற்கும் நடவடிக்கை எடுத்த போது தமிழ் மக்களின் மனங்களில் அவர் நம்பிக்கையை விதைத்திருந்தார். அன்றே எதிரிகள் அவரை இலக்கு வைக்கத் தொடங்கி விட்டனர். ஒரு வகையில் சொன்னால், நம்பிக்கை ஒளிக்கீற்றாக தமிழினத்திற்கு தென்பட்டார் என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு நீதிபதியை இன்று தென்னிலங்கையும் மெச்சி உச்சி குளிர்கின்றதெனில், அவரிடம் ஏதோவொன்று இருக்கின்றது என்பதை…

Read More

இது தவறில்லையா? நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா? – உண்மைக் கதை

ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் நிமிடங்கள் மீண்டும் பிறக்காதா என்று ஏங்குகிறேன். வாழ்வின் இனிய பக்கங்களாய் சேர்ந்த அந்த ஒவ்வொரு விநாடியும் என் வாழ்நாளுக்கான போசாக்கு. பார்த்தவுடன் வரும் காதலெல்லாம் போலியானவை, அவை நிலைக்காது, அது வெறும் ஈர்ப்பு மட்டுமே, என்று நம்ப மறுக்கும் என் முதற் காதலே லவ் ஆன் ஃபர்ஸ்ட் சைட் தான். புதிய ஊர் புதிய அலுவலகம் புதிய மனிதர்கள் அன்றைய தினம் மீட்டிங் ஹாலில் அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்களை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் யாருமில்லை அலுவலைத்தாண்டி சினிமாவைக் கடந்து அரசியலைத் தொட்டு நின்றது எங்களது பேச்சு. பேச்சு காரசாரமான விவாதமாக மாறி ஒவ்வொருவரும் உணர்ச்சிப் பொங்க தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தனர். திடீர் மாற்றம்… திடீரென்றொரு அமைதி எனக்கு மட்டும். ஆம் எனக்கு மட்டும் தான். மற்றவர்கள் பேசுவதை பார்க்க முடிந்தது…

Read More

திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவால் `சிதைக்கப்பட்ட’ ஒரு பெண்ணின் உண்மைக் கதை

டெரி கோபங்காவுக்கு அன்று திருமணம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மணமகளையே காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் பரபரப்பாகத் தேடுகிறார்கள். எங்குமே அவரைக் காணவி்ல்லை. பரபரப்பு பற்றிக் கொள்கிறது. அவர் கடத்தப்பட்டிருப்பார் என்றோ, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்காப்பட்டிருப்பார் என்றோ அல்லது மரணத்தின் விளிம்பில் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றோ யாரும் ஊகித்திருக்கமாட்டார்கள். இளம் நைரோபி போதகரின் வாழ்க்கையில் நிகழ்ந்த இரு சோகங்களில் இதுதான் முதன்மையானது. ஆனால், அந்தக் கோர சம்பவத்திலிருந்து அவர் மீண்டு வந்திருப்பதுதான் முக்கியமானது. அது ஒரு மிகப்பெரிய திருமணம். நான் ஒரு போதகராக இருந்தேன். அதனால் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும், எங்களுடைய உறவினர்களும் வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய எதிர்கால கணவர் ஹாரியும், நானும் மிகவும் உற்சாகமாக இருந்தோம். எங்களுடைய திருமணம் நைரோபியில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்தில் நடைபெறவிருந்தது….

Read More

மசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்

பப்லுவுக்கு நிற்கக்கூட நேரமில்லை. ரமலான் மாதம், ஈகைத் திருநாள், எத்தனை வேலைகள்? கான்பூரில் இருக்கும் மசூதியின் துப்புரவுப் பணியில் பப்லு ஈடுபட்டிருக்கிறார். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த மசூதியின் பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணியில் பப்லுவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். பப்லு மூன்றாவது தலைமுறையாக பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். முதலில் பப்லுவின் தாத்தா, பிறகு பப்லுவின் தாய், இப்போது பப்லு என மூன்று தலைமுறையாக ஒரு இந்துக் குடும்பம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு மசூதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளது வியப்பூட்டும் தகவல். “என் தாத்தா மஹாவீர், பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், 15 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி கான்பூருக்கு வந்துவிட்டார்.” “தற்போது கான்பூர் பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் மணிக்கூண்டு இருந்தது. என் தாத்தா ஐந்து நாட்கள்…

Read More

பெண்கள் பாலியல் பற்றி பேசினால் ஒழுக்கமற்றவர்களா?

ஹாலிவுட் திரைபடங்களில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து பெரிய பெண் அதிரடி ஹீரோயினாக உருவெடுத்து வலம்வந்து கொண்டிருக்கிறார். அழகு, திறமை இரண்டும் சரிவிகிதம் கொண்டுள்ள இவர் பெண்கள் செக்ஸ் பற்றி அச்சம் இன்றி பேச வேண்டும் என்றும், ஆண், பெண் சமநிலை அனைத்திலும் அவசியம் என்றும் சமீபத்தில் கருத்து தெரிவிததுள்ளார் ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமீபத்தில் காஸ்மோபாலிட்டன் இதழுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் உடலுறவு பற்றி தைரியமாக பேச வேண்டும். இந்த சமூகம் பெண்கள் உடலுறவு பற்றி பேசினால் மட்டும் அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாக பார்க்கின்றனர் என கூறியுள்ளார். பெண் ஒரு உடலுறவு பற்றி பேசினால் இந்த சமூகம் அவரை பைத்தியம், புத்திக் கேட்டவள், ஒழுக்கம் அற்றவள் என வரையறை செய்துவிடுகிறது. ஆண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அது சாதாரண பேச்சு, அத்தியாவசியம். இதுவே ஒரு பெண்…

Read More

தாய் விபச்சாரி தான்…. ஆனால், மகள் நியூயார்க் பல்கலைகழகத்தில் படிக்க போகிறார்!

விபச்சாரத்தில் யாரும் விருப்பப்பட்டு ஈடுபடுவதில்லை. பல வகைகளில் விபச்சாரத்தில் சிக்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர் விற்கப்பட்டு, சிலர் ஏமாற்றப்பட்டு, சிலர் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கு மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக. இதில், மூன்றாம் மகளாக பிறந்த அவதிப்படுபவர்கள் நிலை மிகவும் மோசமானது. தன் தாய் அனுதினம் படும் அவஸ்தையை அறிந்து, தானும் இந்த நரக குழியில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே வளர்ந்து மடியும் அப்பாவி ஜீவன்கள் அவர்கள். ஆனால், விபச்சாரிக்கு மகளாக பிறந்தால், விபச்சாரம் தான் செய்ய முடியுமா என்ன? உயர பறக்க முடியாதா.. வாழ்வில் சாதிக்க முடியாதா? என கேள்விகளை படிக்கட்டு ஆக்கி, நியூயார்க் பல்கலைகழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்று பறக்க போகிறார் அஸ்வினி. இது அஸ்வினி தனது வாழ்வில் கடந்து வந்த பாதை… நான் வாழ்வில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறேன். அப்போது என் வயது…

Read More

சிங்கள அரசியல்வாதி VS தமிழ் அரசியல்வாதி – வெட்கக்கேட்டு ஒப்பீடு

இவர் ஒரு சிங்கள அமைச்சர். இவர் பெயர் தெவரப் பெருமா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் உதவி வருகிறார். இவருடைய கைகள் தனது வேட்டியை தூக்கிப் பிடிக்க வில்லை. மாறாக மக்களுக்கு பொருட்களை தூக்கி செல்கிறது. இவருக்கும் பல மெய் பாதுகாவலாகள்; உண்டு. ஆனால் அவர்களை தனக்கு குடை பிடித்து வருமாறு இவர் பணிக்கவில்லை. இவர் விரும்பியிருந்தால் மக்களை பார்வையிட்டுவிட்டு ஹோட்லில் சென்று உணவு அருந்தியிருக்கலாம். ஆனால் அவரோ வீதியில் வைத்து பார்சல் சாப்பாடு சாப்பிடுகிறார். இவர் அமைச்சர் என்பதால் அரசுக்கு நல்ல பெயர் வாங்குவதற்கு நடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சரி. இதோ ஜே.வி.பி தலைவர் அனுரா குமார. இவர் எதிர்க்கட்சிதானே. இவர் விரும்பியிருந்தால் அரசை சாடி ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு வீட்டில் இருந்திருக்கலாம்தானே. ஆனால் இவரோ தனது கட்சி செந்தாரகை அனர்த்த சேவைகள் படையணியுடன்…

Read More

புதுப்பெண்ணும்.. புது உறவும்.. தயக்கமும்….தடுமாற்றமும்…

புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியிருக்கையில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புகுந்த வீட்டில் அடியெடுத்துவைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம். * கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின்…

Read More

`பாலியல் வல்லுறவால் நான் அனுபவித்த துயரம்’: மீண்டு வந்த திருநங்கையின் உண்மைக் கதை

பாலியல் வல்லுறவிற்கு ஆளான பலரைப் போல் நானும் எனக்கு தெரிந்த நபரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானேன். அந்த நபரை நான் ஒரு நாள் இரவு சந்தித்துள்ளேன். சில நாட்களுக்கு பிறகு அதிக கொகைன் உட்கொண்ட நிலையில் காலை ஐந்து மணிக்கு எனது வீட்டின் கதவை தட்டினான். என்னை கட்டிலில் தள்ளினான். நான் கத்தினேன். ஆனால் அவன் என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினான். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பொதுவாக ஏன் திரும்ப எதுவும் செய்யவில்லை என கேள்வி கேட்பார்கள், அதற்கு பல பதில்கள் இருக்கும். என்னுடைய பதில், பொதுவான ஒன்றுதான். நான் திரும்ப எதாவது செய்வது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அவனை நான் உண்டியல் வைத்து தாக்க முயன்றேன். ஆனால் அவன் என்னை விட இரண்டு மடங்கு வலவாக, பலசாலியாக இருந்தான். நாம் சண்டையிட்டு அதில் தோல்வியடைந்தால்…

Read More