பெண்கள் பாலியல் பற்றி பேசினால் ஒழுக்கமற்றவர்களா?

ஹாலிவுட் திரைபடங்களில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து பெரிய பெண் அதிரடி ஹீரோயினாக உருவெடுத்து வலம்வந்து கொண்டிருக்கிறார். அழகு, திறமை இரண்டும் சரிவிகிதம் கொண்டுள்ள இவர் பெண்கள் செக்ஸ் பற்றி அச்சம் இன்றி பேச வேண்டும் என்றும், ஆண், பெண் சமநிலை அனைத்திலும் அவசியம் என்றும் சமீபத்தில் கருத்து தெரிவிததுள்ளார் ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமீபத்தில் காஸ்மோபாலிட்டன் இதழுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் உடலுறவு பற்றி தைரியமாக பேச வேண்டும். இந்த சமூகம் பெண்கள் உடலுறவு பற்றி பேசினால் மட்டும் அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாக பார்க்கின்றனர் என கூறியுள்ளார். பெண் ஒரு உடலுறவு பற்றி பேசினால் இந்த சமூகம் அவரை பைத்தியம், புத்திக் கேட்டவள், ஒழுக்கம் அற்றவள் என வரையறை செய்துவிடுகிறது. ஆண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அது சாதாரண பேச்சு, அத்தியாவசியம். இதுவே ஒரு பெண்…

Read More

தாய் விபச்சாரி தான்…. ஆனால், மகள் நியூயார்க் பல்கலைகழகத்தில் படிக்க போகிறார்!

விபச்சாரத்தில் யாரும் விருப்பப்பட்டு ஈடுபடுவதில்லை. பல வகைகளில் விபச்சாரத்தில் சிக்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர் விற்கப்பட்டு, சிலர் ஏமாற்றப்பட்டு, சிலர் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கு மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக. இதில், மூன்றாம் மகளாக பிறந்த அவதிப்படுபவர்கள் நிலை மிகவும் மோசமானது. தன் தாய் அனுதினம் படும் அவஸ்தையை அறிந்து, தானும் இந்த நரக குழியில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்திலேயே வளர்ந்து மடியும் அப்பாவி ஜீவன்கள் அவர்கள். ஆனால், விபச்சாரிக்கு மகளாக பிறந்தால், விபச்சாரம் தான் செய்ய முடியுமா என்ன? உயர பறக்க முடியாதா.. வாழ்வில் சாதிக்க முடியாதா? என கேள்விகளை படிக்கட்டு ஆக்கி, நியூயார்க் பல்கலைகழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்று பறக்க போகிறார் அஸ்வினி. இது அஸ்வினி தனது வாழ்வில் கடந்து வந்த பாதை… நான் வாழ்வில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறேன். அப்போது என் வயது…

Read More

சிங்கள அரசியல்வாதி VS தமிழ் அரசியல்வாதி – வெட்கக்கேட்டு ஒப்பீடு

இவர் ஒரு சிங்கள அமைச்சர். இவர் பெயர் தெவரப் பெருமா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் உதவி வருகிறார். இவருடைய கைகள் தனது வேட்டியை தூக்கிப் பிடிக்க வில்லை. மாறாக மக்களுக்கு பொருட்களை தூக்கி செல்கிறது. இவருக்கும் பல மெய் பாதுகாவலாகள்; உண்டு. ஆனால் அவர்களை தனக்கு குடை பிடித்து வருமாறு இவர் பணிக்கவில்லை. இவர் விரும்பியிருந்தால் மக்களை பார்வையிட்டுவிட்டு ஹோட்லில் சென்று உணவு அருந்தியிருக்கலாம். ஆனால் அவரோ வீதியில் வைத்து பார்சல் சாப்பாடு சாப்பிடுகிறார். இவர் அமைச்சர் என்பதால் அரசுக்கு நல்ல பெயர் வாங்குவதற்கு நடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சரி. இதோ ஜே.வி.பி தலைவர் அனுரா குமார. இவர் எதிர்க்கட்சிதானே. இவர் விரும்பியிருந்தால் அரசை சாடி ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு வீட்டில் இருந்திருக்கலாம்தானே. ஆனால் இவரோ தனது கட்சி செந்தாரகை அனர்த்த சேவைகள் படையணியுடன்…

Read More

புதுப்பெண்ணும்.. புது உறவும்.. தயக்கமும்….தடுமாற்றமும்…

புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும். காதல் திருமணமாகவோ, நிச்சயித்த திருமணமாகவோ இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஒன்றிணைந்து செயல்படும்போது ஒருவித தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கொருவர் சரிவர புரிந்து கொள்வதற்கு சில காலம் பிடிக்கும். அப்படியிருக்கையில் கணவருடைய குடும்பத்தினருடன் உறவை பேணுவதில் புதுப்பெண்களுக்கு ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. புகுந்த வீட்டில் அடியெடுத்துவைக்கும் புதுப்பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம். * கணவர் குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்படும் விதத்தில் புதுப்பெண்ணின் தலையீடு இருக்கக்கூடாது. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புதுப்பெண்ணின் குணாதிசயங்களை கணவரின் குடும்பத்தினர் சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் அது அவளுக்கு பாதகமாகவே அமையும். கணவரை அவருடைய குடும்பத்தினர் வசைபாடுவதாகவே இருந்தாலும் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அதிலும் அவருடைய பெற்றோர் மகனின்…

Read More

`பாலியல் வல்லுறவால் நான் அனுபவித்த துயரம்’: மீண்டு வந்த திருநங்கையின் உண்மைக் கதை

பாலியல் வல்லுறவிற்கு ஆளான பலரைப் போல் நானும் எனக்கு தெரிந்த நபரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானேன். அந்த நபரை நான் ஒரு நாள் இரவு சந்தித்துள்ளேன். சில நாட்களுக்கு பிறகு அதிக கொகைன் உட்கொண்ட நிலையில் காலை ஐந்து மணிக்கு எனது வீட்டின் கதவை தட்டினான். என்னை கட்டிலில் தள்ளினான். நான் கத்தினேன். ஆனால் அவன் என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினான். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பொதுவாக ஏன் திரும்ப எதுவும் செய்யவில்லை என கேள்வி கேட்பார்கள், அதற்கு பல பதில்கள் இருக்கும். என்னுடைய பதில், பொதுவான ஒன்றுதான். நான் திரும்ப எதாவது செய்வது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அவனை நான் உண்டியல் வைத்து தாக்க முயன்றேன். ஆனால் அவன் என்னை விட இரண்டு மடங்கு வலவாக, பலசாலியாக இருந்தான். நாம் சண்டையிட்டு அதில் தோல்வியடைந்தால்…

Read More

தமிழ் – முஸ்லீம் இனவாதத்தை தூண்டும் தமிழ்மொழி ஊடகங்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்

தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளுக்கிடையில், தமிழ் – முஸ்லீம் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் சில ஊடகங்கள் நாட்டம் காட்டி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக அண்மையில் திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் சில அக் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியர்க்கும் மத அடையாளம் கொடுத்திருந்தன.குற்றவாளிகளும் சிறுமிகளும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் சமூக வலைத்தளங்களில் இரு பிரிவினருக்கும் இடையில் வாய்தர்க்கங்கள் இடம்பெற்றிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இது போன்ற குற்றச்செயல்களில் மத அடையாளங்கள் தேவையற்றவை. இவ்வாறு அடையாளங்கள் கொடுக்கப்படுவதற்கான உண்மை காரணத்தை மக்கள் புரிந்துகொண்டு அவற்றை கருத்தில் எடுக்காது விடுதல் அவசியமாகும். தமிழ் பேசும் இரு இனங்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் ஆகும்.

Read More

ஞானசார தேரரே! உமது துறவு உண்மைத் துறவல்ல! – நீர் ஒரு பயங்கரவாதி

துறவு என்ற சொற்பதத்தின் பொருள் பந்த பாசங்களைத் துறத்தல் என்பதாகும்.பந்த பாசங்களைத் துறப்பதற்கு ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களில் இருந்து விடுபட வேண்டும். இதுவே உண்மைத் துறவு. உண்மையான துறவு நெறி நின்றவர்கள் பலர். அதில் கெளதம புத்தபிரான் முதன்மையானவர். எல்லாப்பற்றும் துறந்த அவர் துறவுக்கான ஓர் எடுத்துக்காட்டு எனலாம். உண்மையில் துறவு என்ற அறத்தில் உச்சமாக ஓங்கி நின்றவர்கள் சமணர்கள். எனினும் அவர்களின் துறவு மிகவும் கடுமையானது. நடைமுறையில், யதார்த்தத்தில் சமணத் துறவைப் பின்பற்றுவது முடியாத காரியம் என்பதால்தான் பெளத்தம் தோன்றியது. சமணத் துறவில் இருந்து சற்று நெகிழ்வுத் தன்மை கொண்டதாக பெளத்த துறவு அமைந்திருந்தது. கெளதம புத்தபிரான் இந்த உலகுக்கு துறவின் மகிமையை எடுத்தியம்பினார்.புத்த பிக்குகளும் புத்த பிக்குணிகளுமாக இருபாலாருக்குரிய துறவை கெளதம புத்த பிரான் போதித்தார். பந்த பாசத்தை அறுத்து, மும்மலங்களை…

Read More