பியருக்கான வரியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை

பியர் வகைகளுக்கான வரியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பியர் மற்றும் வைன் வைகளுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பியருக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பியருக்கான வரி குறைக்கப்படுவதனை பௌத்த மாநாயக்க தேரர்கள் முதல் பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், பியருக்கான வரி குறைப்பு குறித்த தீர்மானத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.

மதுபானத்தில் அடங்கியுள்ள அல்கஹஹோலின் அளவினை அடிப்படையாகக் கொண்டு வரி அறவீடு செய்வதானது சர்வதேச நடைமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

comments

Related posts