பியருக்கான வரியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை

பியர் வகைகளுக்கான வரியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பியர் மற்றும் வைன் வைகளுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பியருக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பியருக்கான வரி குறைக்கப்படுவதனை பௌத்த மாநாயக்க தேரர்கள் முதல் பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், பியருக்கான வரி குறைப்பு குறித்த தீர்மானத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் மீளவும் வலியுறுத்தியுள்ளார். மதுபானத்தில் அடங்கியுள்ள அல்கஹஹோலின் அளவினை அடிப்படையாகக் கொண்டு வரி அறவீடு செய்வதானது சர்வதேச நடைமுறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படவுள்ளது

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் உயர்த்தப்படும். இதன்படி, அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும். சட்ட மா அதிபரின் சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரையில் உயர்த்தப்படும். மருத்துவர்களின் அடிப்படைச் சம்பளம் 60000 ரூபாவிலிருந்து 69756 ரூபாவாக உயர்த்தப்படும். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஆண்டொன்றுக்கு 12 பில்லியன் ரூபா மேலதிகமாக நிதி தேவைப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More