யாழ்ப்பாண பாடசாலையில் புகுந்த பெண்ணால் அதிபருக்கு ஏற்பட்ட நிலை

யாழ். நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த பெண் ஒருவர், குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றும் தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்ட முற்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர்.

அதிபராக கடமையாற்றும் குறித்த நபர் சில தினங்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இதனால், கணவரான குறித்த நபரை தேடி அந்த பெண் பாடசாலைக்கு வந்துள்ளார்.

இதன் போது அதிபர் அலுவலகத்துக்கு சென்ற பெண், தனது உடமையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை அதிபரான கணவர் மீது ஊற்றியதுடன், தன் மீதும் ஊற்றிக்கொண்டு எரியூட்ட முற்பட்டுள்ளார்.

இதனால் பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், சக ஆசிரியர்கள் தலையிட்டு குறித்த பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

Comments

comments

Related posts