சைட்டம் தொடர்பில் இறுதி முடிவை அறிவித்துள்ள அரசாங்கம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, நாடாளுமன்றில் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மீளவும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், ஏற்கனவே மருத்துவ மாணவர்களாக கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஹர்ஸ டி சில்வா கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Related posts