இலங்கையில் அரச வேலை தேடுவோருக்கு பயனுள்ள ஓர் அன்ரொய்ட் அப்ளிகேசன்

இன்றைய இளைஞர்களின் முக்கிய கனவு, அரச வேலை ஒன்றில் இணைந்திட வேண்டும் என்பதே. இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை பொறுத்தவரையில், அவை குறித்த காலப்பகுதியினுள் அரச வர்த்தமாணி, பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியிடப்பட்டு, ஆட்சேர்ப்பு நடைபெறும்.

இதில் பலர் வேலைவாய்ப்பு கோரப்பட்டமை தெரியாமலே அவ் வாய்ப்பை தவறவிடுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு தீர்வாக ஓர் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

அன்ரொய்ட் இயங்குதளம் கொண்ட கையடக்க தொலைபேசிகளில் பதிவிறக்கி பயன்படுத்தக்கூடிய இச் செயலியை அன்ரொய்ட் இன் உத்தியோகபூர்வ செயலிகளின் தளமான கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இச் செயலியில் notification வசதி உட்புகுத்தப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்பு வெளியிடப்படும் காலத்தில் உங்கள் கையடக்கதொலைபேசியில் அச் செய்தி notification ஆக காட்டப்படும். அதை தெரிவுசெய்து, வேலைவாய்ப்பு விபரத்தை முழுமையாக அறிந்து விண்ணப்பிக்க முடியும்.

இச் செயலியின் கூகுள் ப்ளே இணைப்பு: இங்கே அழுத்தவும்

https://play.google.com/store/apps/details?id=com.app.srilankajobbank

Comments

comments

Related posts