இலங்கையில் அரச வேலை தேடுவோருக்கு பயனுள்ள ஓர் அன்ரொய்ட் அப்ளிகேசன்

இன்றைய இளைஞர்களின் முக்கிய கனவு, அரச வேலை ஒன்றில் இணைந்திட வேண்டும் என்பதே. இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை பொறுத்தவரையில், அவை குறித்த காலப்பகுதியினுள் அரச வர்த்தமாணி, பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியிடப்பட்டு, ஆட்சேர்ப்பு நடைபெறும். இதில் பலர் வேலைவாய்ப்பு கோரப்பட்டமை தெரியாமலே அவ் வாய்ப்பை தவறவிடுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு தீர்வாக ஓர் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அன்ரொய்ட் இயங்குதளம் கொண்ட கையடக்க தொலைபேசிகளில் பதிவிறக்கி பயன்படுத்தக்கூடிய இச் செயலியை அன்ரொய்ட் இன் உத்தியோகபூர்வ செயலிகளின் தளமான கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இச் செயலியில் notification வசதி உட்புகுத்தப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்பு வெளியிடப்படும் காலத்தில் உங்கள் கையடக்கதொலைபேசியில் அச் செய்தி notification ஆக காட்டப்படும். அதை தெரிவுசெய்து, வேலைவாய்ப்பு விபரத்தை முழுமையாக அறிந்து விண்ணப்பிக்க முடியும். இச் செயலியின் கூகுள் ப்ளே இணைப்பு: இங்கே அழுத்தவும் https://play.google.com/store/apps/details?id=com.app.srilankajobbank

Read More

சைட்டம் தொடர்பில் இறுதி முடிவை அறிவித்துள்ள அரசாங்கம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, நாடாளுமன்றில் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மீளவும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், ஏற்கனவே மருத்துவ மாணவர்களாக கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஹர்ஸ டி சில்வா கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ்ப்பாண பாடசாலையில் புகுந்த பெண்ணால் அதிபருக்கு ஏற்பட்ட நிலை

யாழ். நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த பெண் ஒருவர், குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றும் தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்ட முற்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர். அதிபராக கடமையாற்றும் குறித்த நபர் சில தினங்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இதனால், கணவரான குறித்த நபரை தேடி அந்த பெண் பாடசாலைக்கு வந்துள்ளார். இதன் போது அதிபர் அலுவலகத்துக்கு சென்ற பெண், தனது உடமையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை அதிபரான கணவர் மீது ஊற்றியதுடன், தன் மீதும் ஊற்றிக்கொண்டு எரியூட்ட முற்பட்டுள்ளார். இதனால் பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், சக ஆசிரியர்கள் தலையிட்டு குறித்த பெண்ணை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

Read More

தின பலன் – 9 நவம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ராசி ரிஷபம் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே ராசி மிதுனம் மதியம் 1.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள்….

Read More