இன்று நள்ளிரவு முதல் விலை குறைக்கப்படவுள்ள 6 அத்தியாவசிய பொருட்கள்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். உருளைக்கிழங்கு , பெரிய வெங்காயம் , பருப்பு , கருவாடு , தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய், கருவாடு ஆகிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

Read More

நாளை மதியத்துடன் பெற்றோல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

நாளை வியாழக்கிழமை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றிரவு 11 மணிக்கு எரிபொருளை ஏற்றிய கப்பல் கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கப்பலின் நகர்வு தொடர்பாக செய்மதி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இன்றிரவு 9 மணிக்கு கப்பல் துறைமுகத்தை அடைந்து விடும் என்று தெரியவந்துள்ளது. இன்றிரவு துறைமுகத்தை கப்பல் அடைந்ததும் உடனடியாக அதனை இறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளை நண்பகல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும். இந்தக் கப்பலில் எடுத்து வரப்படும் எரிபொருள் தரமானது என்றும், அது ஏற்கனவே இரண்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவில் இருந்து இரண்டு கப்பல்களில் எரிபொருள் எடுத்து வரப்படுவதாக தெரிவித்தார். ஜனாதிபதியும் நானும்,…

Read More

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தில் கவலை அழிக்கவுள்ள இலங்கை அரசு

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு இருக்­காது என்றும் வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் வரும் என்றும் நிதி­ய­மைச்சு வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களில் முத­லீடு செய்­வோ­ருக்கு 200வீத வரிச்­ச­லு­கையை தொடர்ந்தும் உயர்ந்த மட்­டத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கும் மலை­க­யத்தில் வீட­மைப்பு வேலைத்­திட்­டத்தை துரி­தப்­ப­டுத்­தவும் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு, செல­வுத்­திட்­டத்தில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு, செல­வுத்­திட்டம் நாளை வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. பகல் 1 மணி­ய­லி­ருந்து மாலை 4 மணி­வரை வரவு, செல­வுத்­திட்ட உரை நிதி அமைச்­ச­ரினால் வாசிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் இம்­முறை வரவு, செல­வுத்­திட்­ட­மா­னது பச்சை நீல எண்­ணக்­க­ருவை…

Read More

விடிய விடிய குடித்தும் போதை ஏறாததால் ஆத்திரம்

லண்டனில் 7 இலட்சம் ரூபாய்க்கு மது அருந்தியும் போதை ஏறவில்லை என நட்சத்திர விடுதி மீது சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். லண்டனின் “வால்தாஸ் ஆம் ஸீ” என்ற நட்சத்திர விடுதி விலையுயர்ந்த உயர் ரக மது வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. இவ் விடுதியில் ஆரம்ப கட்ட மதுவின் விலை 2 இலட்சம் ரூபாவாகும். பணக்காரரான குறித்த சீன எழுத்தாளர் 1878 இல் தயாரிக்கப்பட்ட பாரம்பரியமான மதுவை பல இடங்களிலும் தேடியுள்ளார் இறுதியில் லண்டனில் குறித்த நட்சத்திர விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். அதன் விலை 7 இலட்சம் ரூபாவாகும். குறித்த சீன எழுத்தாளர் மது மொத்தத்தையும் விடிய விடிய குடித்தும் அவருக்கு போதை ஏறாமல் இருக்க ஆத்திரமடைந்த எழுத்தாளர் தனக்கு போலியான மதுவை, அதிக விலைக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என பொலிஸ் நிலையத்திற்கு…

Read More

இலங்கை பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் மகிந்த ராஜபக்‌ஷ

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்சக்களே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தேவையற்ற இடங்கள் தேவையற்ற வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் நாட்டின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. மஹிந்த ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. கொழும்பை அபிவிருத்தி செய்யாது ராஜபக்சக்கள் தங்களது ஊரை அபிவிருத்தி செய்தனர். இதனால் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. 45 முதல் 50 நாட்களுக்கு தேவையான எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய களஞ்சியசாலைகள் காணப்படுகின்றன. எனினும் முழுமையாக எரிபொருள்…

Read More

யோசனை கூறிய காதலியின் மூக்கை பெயர்த்த காதலன்

திருமணத்தை பிற்போட யோசனை முன்வைத்த காதலியை தாக்கிய காதலன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தில் குமார் என்ற நபருக்கே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் திருமணம் நடத்தபட இருந்த நிலையில் திருமணத்தை பிற்போட யோசனை முன்வைத்த நிலையில் காதலன் தன்னை தாக்கியதாக 20 வயதான காதலியொருவர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில் காதலன் அடித்ததால் தனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், காதலன் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றில் சந்தேகநபர் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் கடுமையாக எச்சரித்து, 50,000 ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளார்.

Read More

இலங்கைக்கு அடுத்தடுத்து வரும் பெற்றோல் கப்பல்கள் – கோபத்தில் ரணில்

இலங்கைக்கு இன்றைய தினம் வரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக எதிர்வரும் நாளை மேலுமொரு எரிபொருள் கப்பல் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து குறித்த எரிபொருள் கப்பல் வரவுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். இதேவேளை, நாட்டினுள் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டால் கோபம் அடைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு திடீரென பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை சிக்கலை ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் இந்த நிலைக்கு பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதன்போது மேலும்…

Read More

இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு – பொய்த்துப் போன அமைச்சரின் காரணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு, அந்த நாட்டில் செயல்பட்டு வரும் இந்தியன் ஒயில் நிறுவனமே காரணம் என்ற குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இந்தியன் ஒயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் (எல்ஐஓசி) நிறுவனத்தின் விற்பனை மையங்களில் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டதே காரணம் என்று இலங்கை பெற்றோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், எல்ஐஓசி நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நம்பகத்தன்மை மிக்க எரிபொருள் விநியோகஸ்தரான எங்களது நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ப அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனினும், அண்மைக் கால எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு…

Read More

தின பலன் – 8 நவம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ராசி ரிஷபம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் ராசி மிதுனம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட…

Read More