உரும்பிராயில் அதிக சீதனம் பெற்ற தங்கையால், அக்காவுக்கு அடி உதை

யாழ். உரும்பிராய் பகுதியில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுக்கப்பட்டதால் கணவன் ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். உரும்பிராய் பகுதியில் பிரபல வர்த்தகரின் இரு மகள்களில் இளைய மகளுக்கு கூடுதலான பணம் மற்றும் நகைகள், வீடு போன்றவற்றை சீதனமாக கொடுத்து அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் அக்காவின் கணவரும் ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார்.

தனது மனைவியின் தங்கைக்கு தனக்கு கொடுத்ததை விட அதிக அளவு சீதனம் கொடுத்து திருமணம் நடத்த முற்பட்டபோது குறித்த கணவன் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார்.

எனினும் இவரது பேச்சுக்கு அங்கு இடம் இல்லாமல் போகவே அவருக்கு கொடுக்கப்பட்டதை விட அதிக சீதனம் கொடுத்து தனது மனைவியின் தங்கைக்கு அதிக சீதனம் கொடுக்கப்பட்டு திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமுற்ற குறித்த கணவன் திருமண வீட்டிற்கும் செல்லாமல் திருமண வீட்டிற்கு சென்ற தனது மனைவியையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக காயமுற்ற மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

comments

Related posts