இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி

லங்கா ஐஓசிLanka Indian Oil Company -LIOC நிறுவனம், அவசரமாக 15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்தே, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் 16 வீத எரிபொருள் விற்பனைச் சந்தையை தம்வசம் வைத்திருக்கும் லங்கா ஐஓசி நிறுவனம், அவசரமாக பெற்றோலை சிறிலங்காவுக்கு விநியோகிப்பதற்கு பல்வேறு விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக, அதன் முகாமைப் பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார்.

வரும் 9 அல்லது 10ஆம் நாள் இந்த பெற்றோல் சிறிலங்காவை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.

Comments

comments

Related posts