இலங்கையில் உங்களுக்கு கண்டபடி call, SMS வருகிறதா?

அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மக்களை தொல்லைப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகுமென தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இனிவரும் காலத்தில், இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, ஒழுக்கற்றமற்ற மற்றும் அநாகரிகமான முறையில் குறுந்தகவல்களை அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts