விபச்சார அழகிகளுக்கு அடிமையாகிய நபர் செய்த செயல்

மூடப்பட்டுள்ள வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பெறுமதியான பொருட்களை திருடும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நவகமுவ, ரணாகல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு திருடப்படும் பொருட்களின் மூலம் கிடைக்கும் பணத்தை கசினா விளையாடுவதற்கும், பாலியல் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கும் செலவிட்டுள்ளார். மனைவியை பிரிந்த குறித்த நபர், ராகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு தான் அங்கு வாழ்வதாக பலரையும் நம்ப வைத்துள்ளார். எனினும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் அறை ஒன்றை வாடகைக்கு பெற்று அங்கிருந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். காலை நேரங்களில் தொழிலுக்கு செல்வதனை போன்று நடந்து சென்று மூடியிருக்கும் வீடுகளை தட்டி அங்கு யாரேனும் உள்ளார்களா என்பதனை உறுதி செய்து கொள்வார். அப்படி யாராவது இருந்தால் போலி விலாசம் தொடர்பில் தகவல் கேட்பதை போன்று பாசாங்கு செய்வார். அப்படி…

Read More

வடமாகாண ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்துள்ள உத்தரவு

வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடமாகாண ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, கடமையிலிருக்கும் போது அவுஸ்திரேலியாவுக்கு மேல்கல்வி கற்க செல்வதற்கான அனுமதிகேட்டு மாகாண ஆளுநருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் அனுமதி கிடைக்க முன்னரே மரியதாசன் ஜேகூ அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் மீள அழைக்கப்பட்டு, அனுமதியின்றி வெளிநாடு சென்ற காரணத்தால் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், தனது வெளிநாடு செல்லும் விடுமுறைக்கான விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க கட்டளையிடுமாறும் கோரி உதவிச் செயலாளர் மரியதாசன்…

Read More

உரும்பிராயில் அதிக சீதனம் பெற்ற தங்கையால், அக்காவுக்கு அடி உதை

யாழ். உரும்பிராய் பகுதியில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுக்கப்பட்டதால் கணவன் ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். உரும்பிராய் பகுதியில் பிரபல வர்த்தகரின் இரு மகள்களில் இளைய மகளுக்கு கூடுதலான பணம் மற்றும் நகைகள், வீடு போன்றவற்றை சீதனமாக கொடுத்து அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் அக்காவின் கணவரும் ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார். தனது மனைவியின் தங்கைக்கு தனக்கு கொடுத்ததை விட அதிக அளவு சீதனம் கொடுத்து திருமணம் நடத்த முற்பட்டபோது குறித்த கணவன் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். எனினும் இவரது பேச்சுக்கு அங்கு இடம் இல்லாமல் போகவே அவருக்கு கொடுக்கப்பட்டதை…

Read More

போத்தலில் தானே பெற்றோல் நிரப்பமாட்டாய்… இதில் நிரப்பு – இலங்கையில் சுவாரஸ்யம்

நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன.

Read More

இலங்கையில் கட்டிப்பிடித்த இளைஞனால் இளம்பெண்ணுக்கு கிடைத்த பத்தாயிரம் ரூபா

நீரோடையில் குளித்­துக் கொ ண் ­டி­ருந்த இளம் பெண்ணை, கட்­டி­ய­ணைத்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னுக்கு கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யும், தண்­ட­மும் விதித்து, பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு இழப்­பீ­டும் வழங்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார். பிபிலை நீதி­மன்­றில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போதே, நீதி­வான் மேற்­படி உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளார். நீரோ­டை­யில் குளித்­துக் கொண்­டி­ருந்த இளம் பெண்ணை, அந்­தப் பெண்­ணைக் காத­லிப்­ப­தா­கத் தெரி­விக்­கும் இளை­ஞன் கட்­டி­ய­ணைத்­தமை குறித்து, பிபி­லைப் பொலி­ஸாரால் இளை­ஞ­னுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இளை­ஞ­னுக்கு ஆயி­ரத்து ஐநூறு ரூபா தண்­ட­மும், பாதிக் ­கப்­பட்ட பெண்­ணுக்கு 10 ஆயி­ ரம் ரூபா இழப்­பீ­டும் வழங்­கு­மா­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

Read More

இலங்கையில் உங்களுக்கு கண்டபடி call, SMS வருகிறதா?

அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மக்களை தொல்லைப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகுமென தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இனிவரும் காலத்தில், இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஒழுக்கற்றமற்ற மற்றும் அநாகரிகமான முறையில் குறுந்தகவல்களை அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி

லங்கா ஐஓசிLanka Indian Oil Company -LIOC நிறுவனம், அவசரமாக 15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்தே, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறிலங்காவில் 16 வீத எரிபொருள் விற்பனைச் சந்தையை தம்வசம் வைத்திருக்கும் லங்கா ஐஓசி நிறுவனம், அவசரமாக பெற்றோலை சிறிலங்காவுக்கு விநியோகிப்பதற்கு பல்வேறு விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக, அதன் முகாமைப் பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார். வரும் 9 அல்லது 10ஆம் நாள் இந்த பெற்றோல் சிறிலங்காவை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.

Read More

முள்ளிவாய்க்காலில் இன்று மீட்கப்பட்ட இன்னுமோர் அவலம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்குப் பகுதியில் ஒருதொகை மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்தே மேற்படி ஐம்பது வரையிலான மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் பாக்கியநாதன் மரியமலர் என்பவருடைய காணியிலிருந்து குறித்த மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில், அவர் வசிக்கும் வீட்டிற்கு முன்னால் கொட்டில் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளார். அதன்போது நிலத்தினுள் மிதிவெடிகள் இருப்பதை அவதானித்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர்க்கு இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் குறித்த பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து ஐம்பதுவரையிலான மிதிவெடிகளை மீட்டு செயலிழக்க செய்துள்ளனர். இதேவேளை யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களை எட்டியுள்ள நிலையிலும் யுத்த வெடிபொருட்கள் அவ்வப்போது…

Read More

தின பலன் – 7 நவம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ராசி ரிஷபம் காலை 11.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் ராசி மிதுனம் காலை 11.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில…

Read More