யாழ்ப்பாணம் இளவாளையில் மனைவியின் கள்ளக் காதலனுக்கு கணவன் கொடுத்த பரிசு

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் மனைவியுடன் முறையற்ற உறவு வைத்துக் கொண்ட நபர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவியுடன், முறையற்ற உறவு வைத்துக் கொண்டதால் குறித்த பெண்ணின் கணவன் நேற்றைய தினம்(29) தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால், படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தாக்குதல் நடத்திய பெண்ணின் கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments

comments

Related posts