கிழக்கு பட்டதாரிகளின் பரீட்சை முடிவுகள் வெளியீடு – பார்வையிடுவது எப்படி?

கிழக்கு பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறு கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு இந்த போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. போட்டிப்பரீட்சை பெறுபேற்றினை http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரியுடன் ஊடாக பார்வையிட முடியும். கிழக்கு வேலையில்லாத பட்டதாரிகள் 150 நாட்களுக்கும் மேலாக சத்தியாக்கிரகமிருந்து பலரது அழுத்தங்களினூடாக பரீட்சையொன்றுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு, கடந்த மாதம் பரீட்சை நடத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை இளம் பெண்ணை கடத்திய வழக்கில் சிக்கியுள்ள விபச்சார நடிகை புவனேஸ்வரி

இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கடத்தல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இந்திய நடிகை புவனேஸ்வரியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த காலங்களில் விபச்சாரம் செய்ததாக பொலீஸில் சிக்கி தண்டனை அனுபவித்தவராவார். இவரை இம்மாதம் 30ஆம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 23ஆம் திகதி காணாமல் போயிருந்தார். பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் குறித்த இளம் பெண் காணாமல் போனதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார், மகளுக்கு போதைப்…

Read More

திருகோணமலை மக்களுக்கு மகிழ்ச்சியான ஓர் செய்தி

திருகோணமலை மாவட்டத்திற்கு மகாவலி நீரை திசை திருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றைய தினம்(24) நிதியமைச்சில் அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சவூதி அரேபிய அரசாங்கத்திடம் அனுமதிகோரி அனுப்பப்பட்டிருந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நிதியை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இத்திட்டத்துக்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பல விவசாயக் குடும்பங்கள் நன்மையடைவதுடன், வருடத்தில் ஒரு முறை மாத்திரமே (மானவரி) பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் இத்திட்டத்தின் மூலம், வருடத்தில் இரண்டு முறைகள் பயிரிடமுடியும். இதேவேளை,…

Read More

இலங்கையில் வாழ்க்கை செலவை குறைக்க மகிந்தவின் வழியை பின்பற்றப்போகும் மைத்திரி அரசு

பொதுமக்களை வாட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வழிமுறையே சிறந்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது. அவர் வாரம் தோறும் தொடர்புடைய அதிகாரிகளை அலரி மாளிகைக்கு வரவழைத்து வாழ்க்கைச் செலவைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார். அதன் காரணமாக அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அதே வழிமுறையை நாம் பின்பற்றலாம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் அந்த யோசனையை ஏற்றுக் கொள்ளும் வகையில்…

Read More

காதில் ஹெட்செட் மாட்டியபடி வீதியில் செல்வோருக்கு பாடம் புகட்டியுள்ள வவுனியா சம்பவம்

காதில் ஹெட்செட் மாட்டியபடி வீதியில் செல்வோருக்கு பாடம் புகட்டும் வண்ணம் வவுனியாவில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தில் மோதி மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் காதில் ஹெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் வவுனியா, அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். தற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நீதிபதி இளஞ்செழியன் வடக்கிற்கு முதலமைச்சராக வரவேண்டும் – சிங்களவர் விருப்பம்

இந்து கோயில்களில் மிருங்களை பலியிடுவதற்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று தடை விதித்து தீர்ப்பளித்திருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோயில்கள் போன்ற பொது இடங்களில் 300 அல்லது 500 கோழி மற்றும் ஆடுகள் பலியிடுவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 300 ஆண்டுகளாக இந்த சம்பிரதாயத்தை நடத்தி செல்வதற்காக இறைச்சி கடை சட்டமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி நேற்றைய தினம் சுட்டிக்காட்டினார். நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பினை வரவேற்கும் சிங்கள மக்கள் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்னிலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சிங்களவர், “நீதிபதியின் இந்த தீர்ப்பினால் அவர் மீது மரியாதை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். யாழில் இதனை நிறுத்திய நீதிபதி கடவுளுக்கு எங்களின் கோடான நன்றி. யாழில்…

Read More

தமிழர் ஒருவரை பதவி நீக்கி களங்கம் படைத்துள்ள நல்லாட்சி அரசு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டிற்கு கடற்படை தளபதி ஒருவரை நியமித்து, அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வதற்கு முன்னர் நீக்கியமை சாதனையாகும். கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட ட்ரெவிஸ் சின்னையாவை நேற்று மாலை நீக்கிவிட்டு கடற்படை தளபதியாக ரணசிங்க என்பவரை நியமிக்கும் கடிதத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எந்தவொரு நாட்டிலும் நடக்காத ஒரு சம்பவமே இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. கடற்படை தளபதியாக செயற்படும் ட்ரெவிஸ் சின்னையா தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தின பலன் – 25 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் ராசி ரிஷபம் சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு ராசி மிதுனம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார்…

Read More