வார பலன் – (23 – 30 அக்டோபர் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். குருவும், புதனும் சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 6-ம் வீட்டில் சுக்ரன் மறைந்திருப்பதாலும், 7-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதாலும் மனைவிக்கு முதுகு வலி, மூச்சுப் பிடிப்பு வந்து செல்லும். அவர் ஏதாவது கோபத்தில் கத்தினால் அனுசரித்துப் போங்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப ரகசியங்களை சொல்ல வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரர்களுடன் மோதல் வந்து நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 28, 29 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு

சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடியும். ராகு வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால் எதிர்ப்புகள், ஏமாற்றங்களையும் கடந்து முன்னேறும் சக்தி உண்டாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். அயல்நாடு செல்ல விசா கிட்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். 6-ம் வீட்டில் புதனும், குருவும் மறைந்திருப்பதுடன், சூரியனும் மறைந்திருப்பதால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். மனைவிக்கு தைராய்டு பிரச்னை, வயிற்று வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். போராடி வெல்லும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 25 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை: வடக்கு

மனிதநேயம் அதிகமுடைய நீங்கள் மன்னிக்கும் குணமுள்ளவர்கள். கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் உங்களின் செல்வாக்கு கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகன வசதிப் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சூரியன் 5-ல் நுழைந்திருப்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டதெல்லாம் துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 24, 25, 26 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

முடிவுகளைப் பற்றி கவலைப் படாமல் நியாயத்திற்காக மோதிப்பார்ப்பீர்கள். மந்திரியாக இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவீர்கள். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் நிம்மதி கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். சிலர் பழைய காலி மனையை விற்று விட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் ஆடை, ஆபரணங்கள் சேரும். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பழுதான தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிலர் உங்களை கடுமையாக விமர்சிப்பார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு க¬¬யை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. உத்யோகத்தில் மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். தெய்வபலத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு

தப்பு செய்தவர்களை தட்டிக் கேட்கும் நீங்கள், உறவைனர்களைக் காட்டிலும் நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவீர்கள். ராசிநாதன் சூரியன் நீச்சமானாலும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்டப் ப்ளான் அப்ரூவலாகி வரும். பணப்புழக்கம் பரவாயில்லை. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால் இடம், பொருள் ஏவலறிந்து பேசப்பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாமதம் ஏற்படும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், வீண் விரையம், ஏமாற்றம், மறைமுக விமர்சனங்களெல்லாம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமிப்புச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 29 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு

தொட்டகாரியத்தை துலக்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், ஒரு காரியத்தை எடுத்துவிட்டால் ஒருபோது முடிக்காமல் விடமாட்டீர்கள். சனி, ராகு மற்றும் குரு வலுவாக இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வேற்றுமொழி, மாற்று மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சூரியன் 2-ல் நுழைந்திருப்பதால் பேச்சால் பிரச்னை, கண் எரிச்சல், காது வலி, பல் வலி வந்துப் போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் மனவருத்தம், காரியத் தடங்கல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், இரத்த சோகை, நெஞ்சு வலி வந்துப் போகும். வியாபாரத்தில் மறைமுக போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தடைகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: கிழக்கு

பிறர் நிழலில் வாழ விரும்பாத நீங்கள், தன் சம்பாத்தியத்தில் கூழ் கிடைத்தாலும் அமிர்தமாக நினைப்பீர்கள்.தன் தவறை மறைக்க பிறரை குறைகூறும் குணம் உங்களிடமில்லை. சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உறவினர், நண்பர்களின் ஆதரவுப் பெருகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வரக்கூடும். அவ்வப்போது தூக்கம் குறையும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். அரசு வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 28 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மயில்நீலம் அதிஷ்ட திசை: வடமேற்கு

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். கேது வலுவாக 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளுக்கு தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம் நடந்தேறும். லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்பதால் பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகைத் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். 12-ல் குரு நிற்பதுடன், சூரியனும் 12-ல் நுழைந்திருப்பதால் வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி, திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்துப் போகும். பழைய கசப்பான அனுபவங்களையெல்லாம் நினைவுக்கூர்ந்து நிம்மதியை இழந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியமாக புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 28, 29 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு அதிஷ்ட திசை: மேற்கு

பிரச்சனைகளை கண்டு அலட்டிக்கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க தயங்கமாட்டீர்கள். உங்களின் பாக்யாதிபதி சூரியன் லாப வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். ஆனால் சூரியன் நீசமாவதால் கண் எரிச்சல், தந்தைக்கு மருத்துவச் செலவு வந்து போகும். பணப்பற்றாக்குறை அகலும். புது வேலை அமையும். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் உருவாகும். வாகனத் தொல்லை நீங்கும். சொந்த-பந்தங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் முன்கோபம், டென்ஷன், பேச்சால் பிரச்னை, பாதத்தில் அடிப்படுதல், பல் வலி, எதிலும் பிடிப்பற்றப் போக்கு வந்துச் செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பழைய பிரச்சனைகள் தீரும். புது பொறுப்பும், வாய்ப்புகளும் கதவைத் தட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, மஞ்சள் அதிஷ்ட திசை: தெற்கு

பள்ளிப் பருவத்திலேயே வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிக்கும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென பேசும் பழக்கம் உடையவர்கள். சூரியன் நீச்சமானாலும் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பிர்கள். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். மனச்சோர்வு விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். விலையுயர்ந்த சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். குருவும், சர்ப்ப கிரகங்களும் சாதகமாக இல்லாததால் மறைமுக எதிர்ப்புகள், வதந்திகள், ஏமாற்றங்கள், வீண் விரையங்கள், பொருள் இழப்புகளெல்லாம் வரக்கூடும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். சிக்கல்களில் இருந்து ஒரளவு விடுபடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெள்ளை அதிஷ்ட திசை: வடகிழக்கு

எதார்த்தமாகப் பேசும் நீங்கள், அவ்வப்போது கற்பனையில் மூழ்குவதுண்டு. தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப்பொருட்களை பாதுகாப்பவர்கள். குரு சாதகமாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும். செவ்வாய் 8-ல் நிற்பதால் சிறுசிறு விபத்துகள், சகோதர வகையில் டென்ஷன், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், நெஞ்சு எரிச்சல், இரத்த அழுத்தம், முன்கோபமெல்லாம் வரக்கூடும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். இறக்குமதி வகைகளால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கோபத்தை குறைப்பதால் மகிழ்ச்சி பொங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24, 26 அதிஷ்ட எண்கள்: 6, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ரோஸ் அதிஷ்ட திசை: மேற்கு

தலைமைப் பதவியில் அமர வைத்தாலும் தடம் மாறாத நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் கொண்டவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் புது சிந்தனைகள் மனதில் தோன்றும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். புது வேலை அமையும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வழக்கு சாதகமாகும். கேது வலுவாக இருப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். கடந்த காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை நினைத்து அவ்வப்போது உற்சாகமடைவீர்கள். வேற்றுமதத்தவர்களால் திருப்பம் உண்டாகும். செவ்வாய் 7-ல் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வந்து நீங்கும். சொத்து, வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புது நபர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றிய விமர்சனம் வேண்டாம். தட்டு தடுமாறி கரையேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 28 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு அதிஷ்ட திசை: வடகிழக்கு

Comments

comments

Related posts