HNB வங்கியில் A/L தகைமையுடன் வேலைவாய்ப்பு

இலங்கை ஹட்டன் நஷனல் வங்கியில் க.பொ.த உயர்தர தகைமையுடன் பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வயது எல்லை 18 – 25. விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும். http://elearning.hnb.lk/careers/

Read More

வார பலன் – (23 – 30 அக்டோபர் 2017) – ஜோதிடர் வித்தியாதரன்

எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். குருவும், புதனும் சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வீட்டு மனை, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 6-ம் வீட்டில் சுக்ரன் மறைந்திருப்பதாலும், 7-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதாலும் மனைவிக்கு முதுகு வலி, மூச்சுப் பிடிப்பு வந்து செல்லும். அவர் ஏதாவது கோபத்தில் கத்தினால் அனுசரித்துப் போங்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப ரகசியங்களை சொல்ல வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பங்குதாரர்களுடன் மோதல் வந்து…

Read More

ஊவா மாகாண தமிழ் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பட்டதாரிகள் தங்களுக்கான ஆசிரிய தொழில் நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு எந்த தரகர்களையும் அணுக வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபன் இதனைத் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் தமிழ் பட்டதாரிகள் சிலர் ஆசிரிய தொழில் நியமனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்தி ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் குறித்த முறைபாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஊவா மாகாண சபை மேற்கொண்டிருப்பதாகவும் ருத்திரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

நீதிபதி இளஞ்செழியனின் மனதை நெகிழவைத்த செயல்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் 90ஆவது நாள் கிரியைகள் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளன. குறித்த கிரியைகளுக்கான பௌத்தமத அனுஷ்டானங்கள் நேற்றுமுன் தினம் நடைபெற்றுள்ளது. இதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார். நீதிபதி இளஞ்செழியனின் 17 வருட மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் குடும்பத்திற்கு தொடர்ந்தும் நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகின்றார். இந்த நிலையில் 90ஆம் நாள் கிரியையிலும் தவறாது கலந்து கொண்டுள்ளமையானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 57 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி…

Read More

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி

2019ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புலமைப்பரிசிலுக்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஒரு கல்வி வலயத்திற்கு 100 மாணவர்கள் வீதம் இந்தப் புலமைப் பரிசிலை வழங்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு 24 மாதங்களுக்காக 500 ரூபா வீதம் மாதாந்தம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை வங்கியுடன் இணைந்து கல்வி அமைச்சு இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.

Read More

தின பலன் – 24 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் மாலை 5.41 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் ராசி ரிஷபம் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 5.41 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி மிதுனம் குடும்பத்தில்…

Read More