இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (16-22 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

இலங்கை அரச ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் புதிய சுற்றறிக்கை

கடமையில் ஈடுபட்டுள்ளபோது காயங்களுக்கு உள்ளாகும் அரச ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இம் மாற்றம் செய்த சுற்றறிக்கையானது 18.07.2017 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

யாழில் இளைஞன் சுட்டுக் கொலை தொடர்பில் வெளியானது புதிய தகவல்

யாழ். அரியாலைப் பகுதியில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் குறித்த இளைஞனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது டொன் பொஸ்கோ ரிக்மனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் கருத்து தெரிவிக்கையில், “நானும் எனது நண்பனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தோம். எமது மற்றுமொரு நண்­ப­னின் மோட்­டார் சைக்­கி­ளுக்கு பெற்­றோல் இல்லை என்று கூறி­ய­தால், எமது மோட்­டார் சைக்­கி­ளி­லி­ருந்து சிறிது பெற்­றோலை எடுத்­துச்­சென்று கொடுத்து விட்டு திரும்பி வந்­து­கொண்­டி­ருந்­தோம். மணி­யந்­தோட்­டம் சந்­தியை அண்­மித்­த­போது எதிரே மோட்­டார் சைக்­கி­ளில் முகத்தை மூடிய…

Read More

யாழ் – கொழும்பு – யாழ் ரயில் பயணிகளுக்கு ஓர் நினைவூட்டல்

பாலம் ஒன்றை சீரமமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடரூந்து சேவை இடம்பெறும் என தொடரூந்து கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார். நாவற்குழியிலிருந்து காங்கேசன்துறை வரை விஷேட பேரூந்து வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பெறுவதில் புதிய நடைமுறை

இலங்கையில் அடையாள அட்டை பெறுவதற்கு தகுதியான பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு இனி கொழும்பிற்கு வரத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றதுடன், தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்தின் பணிகள் பண்முகப்படுத்தப்பட உள்ளன. இதன்படி, மாவட்ட மட்டத்தில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகங்களில் ஒருநாள் சேவையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாத பத்து இலட்சம் பேர் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வித்தியாவின் சகோதரிக்கு மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் சகோதரிக்கு அவரது கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்காக அனைத்து உதவிகளையும் தான் செய்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார். நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இதன்போதே குறித்த வாக்குறுதியினை அவர் வழங்கியுள்ளார், இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலும் பதிவு ஒன்றை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரபாகரனை பொறுத்தமட்டில் நான் துரோகி இல்லை – கருணா

விடுதலைப் புலிகளின் தலைமையை விமர்சித்தமை தொடர்பில் அச்சம் கொண்டிருந்ததாக முன்னால் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளின் தலைவரை பயங்கரவாதி என கூறினால் என்ன ஆகுமோ என்ற அச்ச நிலைமையை தாம் எதிர்நோக்கியதாக கருணா குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் பிரபாகரன் தம்மை ஒருபோது துரோகி எனக் கூறியிருக்க மாட்டார் எனவும் கருணா குறிப்பிட்டார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கருணா இந்த தகவலை வெளியிட்டார்.

Read More

வடக்கில் கணவனை இழந்த பெண்களை இழிவாக பேசிய பா.உ – மக்களால் துரத்தியடிப்பு

வடக்கில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள் என தரக்குறைவாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இர்ஷாக் ரகுமான் உரையாற்றியமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இர்ஷாக் ரகுமான் உரையாற்றியமைக்கே இவ்வாறு விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், ஊடக நிறுவனங்களாயினும் ஊடக கற்கை நிறுவனங்களாக இருந்தாலும் அரசியல் கலப்பின்றி இருத்தல் வேண்டும். இந் நிகழ்வுக்கு கூட வவுனியாவில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சி அரசியல்வாதிகளை அழைத்துள்ள போதிலும் வேறு மாவட்டங்களில் இருந்து ஒரே கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளையே அழைத்துள்ளீர்கள். இவ்வாறு அழைப்பதானது உங்களது ஊடக நிறுவனம் அரசியல் சார்ந்து பார்க்கப்பட்டுவிடும். எனவே அரசியலாளர்களை அழைக்கும் போது அனைத்து…

Read More

வெள்ளவத்தை, பம்பலபிட்டி மக்களே – எச்சரிக்கை

பம்பலப்பிட்டிய மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணும் ஆபத்தான முதலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஏரிக்கு அருகில் சென். பீட்டர் பாடசாலையின் மைதானமும் உள்ளது. இதனால் இந்த ஏரியில் உள்ள முதலைகளினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த எல்லையில் அதிகமான வீடுகள் உள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Read More

தின பலன் – 23 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ராசி ரிஷபம் மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு ராசி மிதுனம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப்…

Read More