நாளை நள்ளிரவு முதல் மீண்டும் புகையிரத வேலைநிறுத்தம்

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு தேசிய சம்பள ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த வேலை நிறுத்தம் நாளை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத மேலாளர்களின் தொழிற்சங்க அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி புகையிரத கட்டுப்பாட்டாளர், மேலாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பெண்கள் ஆபாச ஆடை அணிந்தாலும் ஆண்கள் தான் மனதை கட்டுப்படுத்தவேண்டும் – சங்கா

பெண்கள் ஆபாசமாக வீதியில் சென்றாலும் ஆண்கள் தங்கள் மனதை சரியானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதன் அத்தியாவசியம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட சங்கக்கார கருத்து வெளியிட்டார். “பெண்கள் எப்படி சென்றாலும் ஆண்கள் என்ற ரீதியில் மனதை கட்டுப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். எங்கள் மனதை சிறந்த முறையில் வைத்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இது பெண்களின் தவறு என கூறுகின்றனர். இது ஆண்களின் சுதந்திரத்திற்கு உள்ள விடயம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

பாடசாலையில் வாந்தி எடுத்த O/L மாணவி – வாந்தி எடுத்தது ஒரு தப்பா

கெக்கிராவையிலுள்ள மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து வைத்திய பரிசோதனை நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கெக்கிராவையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவி இந்த சம்பவத்தால் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த மாணவி பாடசாலை நேரத்தில் சத்தி எடுத்த காரணத்தினால் பாடசாலை அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த மாணவி காலை உணவு சாப்பிடாமல் வந்த காரணத்தினால் பாடசாலையில் சத்தி எடுத்துள்ளார். ஆனால் இதை முதலில் தவறாக புரிந்து கொண்டு குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து வந்து குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் பாடசாலையில் இருந்து விலக்கப்படுவதாகவும் தெரிவித்து கடிதம்…

Read More

வித்தியா கொலையாளிகள் ஐந்து ஆண்டுகளில் விடுதலையாக வாய்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார். ஐந்து குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். வித்தியா படுகொலை வழக்கின் மூலப் பிரதிகள் (ஊர்காவற்றுறை நீதிவான் மன்ற வழக்குப் பதிவேடு மற்றும் தீர்ப்பாயத்தின் பதிவேடு) சிங்கள மொழிக்கு மாற்றப்பட வேண்டும். அவை சுமார் 4 ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை. அதற்காக குறைந்தது ஓராண்டு செல்லும். பிரதம நீதியரசர் 5 நீதியரசர்கள் அடங்கிய தீர்ப்பாய குழாமை நியமிக்க வேண்டும். அந்தக் குழாம் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும்….

Read More

இலங்கை அன்ட்ரொய்ட் பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார் நிலையில் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுதொடர்பில் அன்ட்ரொயிட் திறன்பேசி பாவனையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘அழ வேண்டுமா’ என்று பொருள்படும் வொன்னக்ரை என்ற கப்பம்பெறும் மென்பொருள் தீம்பொருள் ஒன்றின் ஊடாக 99 நாடுகளில் பல்வேறு கணினிகள் பாதிக்கப்பட்டன. ஆய்வுகளில் தற்போது இவ்வாறான மென்பொருள் அன்ட்ரொயிட் திறன்பேசிகளிலும் பரவ ஆரம்பித்திருப்பதாகவும், அதன்பாதிப்பு இலங்கையிலும் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த மென்பொருள் கைப்பேசிக்கு மின்னஞ்சல் உள்ளிட்ட ஏதேனும் வடிவங்களில் அனுப்பப்படும் போது, அதனை திறப்பதன் ஊடாக குறித்த கைப்பேசியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதில் சேமிக்கப்பட்டுள்ள ஏனைய தொடர்பிலக்கங்களின் கைப்பேசிக்கும் பரவும். அத்துடன் கைப்பேசியில் உள்ள முக்கியமான ஆவணங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் குறித்த…

Read More

கொழும்பில் இந்த விண்வெளிப் பொருளை கண்டால் பிளாஸ்டிக் பொருளால் மூடவும்

விண்வெளியிலுள்ள கல்லொன்றே தென் பகுதியில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் வீழ்ந்துள்ளதாக ஆர்த சிறி கிளார்க் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானில் பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடன் ஒரு பொருள் தென் பகுதியில் வீழ்ந்துள்ளதை அடுத்து அங்கு மக்களிடையே பாரிய பரப்பரப்பு நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து லங்கா சிறி செய்தி சேவை ஆர்த சிறி கிளார்க் மையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் வினவியது. பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான வெளிச்சத்துடன் செல்லும் ஒரு வகை பொருளொன்றை மக்கள் அவதானித்துள்ளமை குறித்து அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த பொருள் தென் பகுதியை நோக்கி செல்வதனை கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பொருள் குறுக்காக செல்வதனை போன்றே மக்கள் அவதானித்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,…

Read More

மஹிந்த ராஜபக்‌ஷவின் தீவாவளி கொண்டாட்டங்கள் – மகிந்தவின் கையில் விஷேட வஸ்து

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் தெகிவளை விஷ்ணு ஆலயத்துக்குச் சென்று தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். அங்கிருந்த மக்களால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதிகளில் பிரேமதாச வும், மஹிந்தவும் இந்து மதத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமதாஸ தான் முக்கிய வேலைகளுக்காக வெளியில் செல்லும் போது பசு ஒன்றை பார்த்துவிட்டு செல்வாராம். தற்போது மகிந்த தனது கையில் துளசி மணிகளால் ஆன ஆபரணம் ஒன்றை அணிந்துள்ளார்.

Read More

தமிழ் சிறுமியும் இருவரும் காணாமல் போன விவகாரம் – எம்.பி யின் மாமியார் கைது

வெல்லம்பிட்டியில் மூன்று யுவதிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாமியார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி ஆடைகள் கொள்வனவுக்குக் சென்றிருந்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளம் யுவதிகள் காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து பொலிஸாரினால் தீவிரமாகத் தேடப்பட்ட நிலையில் யுவதிகள் மூவரும் நேற்றைய தினம் கம்பஹா பொலிசில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த யுவதிகளில் 14 வயதான யுவதியை கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாமியார் (மனைவியின் தாயார்) வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று மாலை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read More

தின பலன் – 19 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே ராசி ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட் ராசி மிதுனம் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி…

Read More