தெற்கை போலவே தண்டிக்கப்படவுள்ள வடக்கு மக்கள்

நீதிமன்ற உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் நிச்சம் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் நீதிமன்றத்தின் தடையை மீறி போரராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய காவற்துறை மா அதிபர், நாட்டின் சகல பகுதிகளிலும் ஒரே மாதிரியான சட்டமே அமுலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன்படி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 071 75 82 222 மற்றும் 071 85 91 002 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இனி, பாரிய குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

அமெரிக்க விசா லொத்தர் தொடர்பாக மிக முக்கிய அறிவித்தல் ஒன்று

தொழில்நுட்ப இடர்கள் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான பல்வகைமைப்பட்ட விசா (Green Card) நிகழ்ச்சி, விண்ணப்பக்காலம்நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. புதிய நிகழ்ச்சியின்படி, ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2019 பல்வகைமைப்பட்ட விசா நிகழ்ச்சியில் பரிசீலிக்கப்படாது. இதன்காரணமாக ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் மீண்டும் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர். இதன்படி நாளை ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள விண்ணப்பக்காலம் எதிர்வரும் நவம்பர் நவம்பர் 22ஆம் திகதி இரவு 10 மணிக்கு முடிவடையவுள்ளது. புதிய பதிவுக்காலத்தில் மற்றும் ஒரு பிரவேச விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படவேண்டும். இந்தநிகழ்ச்சி தொடர்பான அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்கள இணைத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

Read More

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பீடம் ஒன்று இழுத்து மூடப்பட்டது

மாணவர்களுக்கு இடையிலான மோதலை அடுத்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை பீடம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைபீடத்தின் மீள்திறப்பு தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் இனி முச்சக்கரவண்டிகளுக்கு தடை – இதோ புதிய வாகனம்

இலங்கையில் புதிய வகை வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். முச்சக்கர மற்றும் மோட்டார் கார்களுக்கு பதிலாக புதிய வாகனம் ஒன்று இலங்கைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சாதாரணமாக ஏற்படுகின்ற விபத்து காரணமாப வருடாந்தம் பாரிய அளவு உயிர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் ஊனமுற்ற நிலைக்கு பலர் செல்வதனால் அதற்கு தீர்வாக ஸ்ரீ Quadry Cycle என்ற நான்கு சக்கர வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த நாட்டினுள் பயணிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகான முச்சக்கர வண்டிகள் காரணமாக ஏற்படுகின்ற விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தில் யோசனை செய்யப்பட்டதற்கமைய இந்த வாகனம் அறிமுகப்படுத்தி வைக்கும் நடவடிக்கை…

Read More

தின பலன் – 18 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ராசி ரிஷபம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே ராசி மிதுனம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட…

Read More