இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளம் பெண்ணின் விநோத காதல்

நுவரெலியாவில் விநோதகுணம் கொண்ட யுவதி ஒருவர் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பலரும் பல பிராணிகள் மீது பிரியம் கொண்டவர்களாக இருப்பார்கள், ஆனால் குறித்த யுவதி நுளம்புகள் மீது தீவிர காதல் கொண்டுள்ளார்.

நுவரெலியா – மாகஸ்தோட்டை பகுதியை சேர்ந்த யுவதியே நுளம்புகள் மீது அன்பு கொண்டுள்ளார்.

தன் வீட்டுக்கு வரும் நுளம்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன், தனது இரத்தத்தை உணவாக கொடுத்து வருகிறார்.

இவரின் வீட்டை சுற்றி நூற்றுக்கணக்கான நுளம்புகள் குடிகொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாகஸ்தோட்டை பகுதி மக்கள் கருத்து வெளியிடுகையில்,

இரவு நேரங்களில் அதிகளவான நுளம்புகள் குறித்த யுவதி வீட்டை நோக்கி படையெடுப்பதாகவும், அவரின் கால்கள் மற்றும் கைகளில் அதிகளவான நுளம்புகள் குடிகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பல உயிர்களை பறிக்கும் டெங்கு நோய் நுளம்புகள், மூலம் ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் நுளம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து, தனது இரத்தத்தை உணவாக கொடுக்கும் யுவதியின் செயற்பாடு குறித்து அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Comments

comments

Related posts