வவுனியாவில் தன் தம்பியை வயிற்றில் சுமக்கும் கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வந்த இந்த சிறுமியின் நடத்தைத் தொடர்பில் அவரது தாயார் சந்தேகம் கொண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் இது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், சிறுமிக்கு உடல் பலவீனமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் திருப்தியடையாத தாயார், வவுனியா மருத்துவ மனைக்கு கடந்த வியாழக்கிழமை சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது இந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தாய் கூலிவேலைக்கு செல்லும் நாட்களில் வேலை முடிந்து வீட்டில் நின்ற…

Read More

இலங்கையில் இப்படியும் நடக்கிறது – பொலீஸ் அதிகாரியில் காது கடிப்பு

பாடல் பாட வேண்டாம் என அறிவுறுத்தியால் ஆத்திரமடைந்தவர்கள் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதுடன் அவரின் காதையும் கடித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி இரவு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து, பிரபு பாதுகாப்பின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குலுக்குள்ளான அதிகாரி நாரஹென்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த தினத்தன்று இரவு 7 மணியளிவில் தனது பொலிஸ் சோதனைச்சாவடி அருகே சிலர் பாடல் பாடி கொண்டிருப்பதாகவும் அதனை நிறுத்துமாறும் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு இராணுவ உயர் அதிகாரிகள்…

Read More

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை மாணவி சாராவிற்கு ஏற்பட்ட விபரீதம்

யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயதான கே. சரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த சரா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுமியின் உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Read More

தின பலன் – 16 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம் ராசி ரிஷபம் ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட் ராசி மிதுனம் மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட…

Read More