நீரிழிவுக்கும் சோற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியுமா?

சோற்றை உண்பதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சோறு சாப்பிடுகிறார்கள்.

கஞ்சியை வடிக்காமல் சோறு சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. கஞ்சி வடித்த சோற்றினால் எந்த பாதிப்பும் கிடையாது.

ஆனால் இந்த கஞ்சியிலும் மருத்துவ நன்மைகள் உள்ளன.

சோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சோறு உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

Comments

comments

Related posts