சைட்டத்துக்கு எதிராக போராடும் கலை, வர்த்தக பீட மாணவர்களே…

சைட்டத்துக்கு எதிராக போராடும் கலை, வர்த்தக பீட மாணவர்களே… சைட்டம் போராட்டமானது பட்டமானது காசுக்கு விற்கப்படுகிறது என்பதற்காகவும், அப் பட்டதாரிகளால் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் நடாத்தப்படுகின்றது. இதில் வருமானப் பாதிப்பே பிரதானமாகக் காணப்படுகின்றது எனலாம்.

இவர்களின் போராட்டம் இப்படி இருக்க அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என அரச பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகம் படிப்போரும் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் போராடவேண்டியது சைட்டத்துக்கு எதிராக இல்லை…

வேறு எதற்கு எதிராக..?

இலங்கையில் தற்போது ஆங்கிய எழுத்துக்கள் நான்கு அல்லது ஐந்தை ஒன்றாக இணைத்துக்கொண்டு ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டு பல நிறுவனங்கள் கிளம்பியுள்ளன. அவை தான் உண்மையில் பட்டத்தை விற்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். அங்கு பட்டத்தை பெற ஒன்றும் தேவையில்லை. அவர்கள் கேட்கும் காசை கட்டிவிடவேண்டியது தான். அதன் பின்னர் வகுப்பு என்று ஏதோவெல்லாம் நடைபெறும். அதன் பின்னர் அசைன்மென்ட் என்று ஒன்றை கொடுத்து பட்டத்தையும் கொடுத்துவிடுவார்கள்.

பல கஸ்டங்களுக்கு மத்தியில் AL சித்தி பெற்று, பல வெட்டுப்புள்ளி திட்டங்களை தாண்டி பல்கலைக்கழகம் சென்று, அங்கு 3-4 ஆண்டுகள் கடுமையாக் உழைத்து பட்டம்பெற்று வேலைக்கு நுழையும் மாணவனுடன் போட்டிக்கு அந்த பட்டக்கடைகளில் பட்டம் பெற்றவர்கள் வந்து நிற்பார்கள்.

இது போன்ற விற்பனைகள் தான் முதலில் நிறுத்தப்படவேண்டும். மாணவர்களே சிந்தியுங்கள்.

Comments

comments

Related posts