இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக புதிய சட்டம்

கணனி குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

கணனி ஹெக்கர்கள் சைபர் தாக்குதல்களின் மூலம் இலங்கையை கேந்திர நிலையமாகக் கொண்டு மேற்கொள்ளும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.

வங்கி கணக்குகள் மீது சைபர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் இரண்டு மட்டுமே இலங்கையில் பதிவாகியுள்ளன.

பங்களாதேஷ் வங்கி மீதான தாக்குதல் மற்றும் அண்மையில் தாய்வானில் பதிவான தாக்குதல் என்பனவே இவ்வாறு பதிவாகியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னதாக இடம்பெற்றது கிடையாது என்பதனால் வழக்குத் தொடர்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய சட்டங்களை உருவாக்கி கணனி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கணனி குற்றச் செயல்களை தடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

comments

Related posts