யாழ்ப்பாணம் – கொழும்பு இடையேயான பாழடைந்த பஸ் களின் பயங்கரம்

யாழ்ப்பாணம் கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் இன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் சமயத்தில் அதிகாலை ஆனையிறவுக்கு அண்மையில் பாலம் ஒன்றில் மோதுண்டது.

அதிர்ஸ்டவசமாக பயணிகள் காயங்களின்றி தப்பினர்.

இதேபோன்ற சம்பவம் ஒன்று அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலும் இடம்பெற்றிருந்தது. தற்போது யாழ் – கொழும்பு இடையே புகையிரத சேவைகள் இடம்பெறுகின்றபோதும், தாமதமான வருகை மற்றும் ஆசன முற்பதிவு விரைவில் முடிவடைந்துவிடுகின்றமை காரணமாக மக்கள் இப் பேரூந்துகளையே பெருமளவில் நம்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொழும்பு இடையே பஸ் சேவையில் ஈடுபடும் பல பஸ்கள் நியாயமான பாவனை காலத்தை கடந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றமை அவதானிக்கப்படுகிறது. இதுபோன்ற பஸ்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதுபோகின்றது.

Comments

comments

Related posts