தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 1000 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 18 – 28 வயதுடைய ஆண், பெண் இருபாலாரும் குறித்த பொலிஸ் சேவையில் இணைய முடியும்.

பொலிஸ் பற்றாக்குறையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே காணப்படுகிறார். இதனால் சேவைகளை வழங்குவதில் பெரும் இடர்கள் காணப்படுகின்றன.

வேலையற்ற பட்டதாரிகளிற்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பில் அவர்களுக்கு பொருத்தமான பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.

என்றார்.

Comments

comments

Related posts