உயர்தரத்துக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நாளை காத்திருக்கும் அதிர்ச்சி

தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு அதிகமாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையை பிரகடன படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராச் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கமையவே தேசிய பாடசாலைகளில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு அதிகமாக தேசிய பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் ஆசியரியர்கள் 12000 பேர் காணப்படுவதாகவும் அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு நாளைய தினம் இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றங்கள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு, கல்வி பொது தராதர பத்திர உயர்தர மாணவர்களுக்கு கற்பிக்கும் மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குரிய இடமாற்றத்திற்கான அறிவித்தல் கடிதம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு…

Read More

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையேயான பாழடைந்த பஸ் களின் பயங்கரம்

யாழ்ப்பாணம் கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் இன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் சமயத்தில் அதிகாலை ஆனையிறவுக்கு அண்மையில் பாலம் ஒன்றில் மோதுண்டது. அதிர்ஸ்டவசமாக பயணிகள் காயங்களின்றி தப்பினர். இதேபோன்ற சம்பவம் ஒன்று அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலும் இடம்பெற்றிருந்தது. தற்போது யாழ் – கொழும்பு இடையே புகையிரத சேவைகள் இடம்பெறுகின்றபோதும், தாமதமான வருகை மற்றும் ஆசன முற்பதிவு விரைவில் முடிவடைந்துவிடுகின்றமை காரணமாக மக்கள் இப் பேரூந்துகளையே பெருமளவில் நம்பியுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்பு இடையே பஸ் சேவையில் ஈடுபடும் பல பஸ்கள் நியாயமான பாவனை காலத்தை கடந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றமை அவதானிக்கப்படுகிறது. இதுபோன்ற பஸ்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதுபோகின்றது.

Read More

தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 1000 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 18 – 28 வயதுடைய ஆண், பெண் இருபாலாரும் குறித்த பொலிஸ் சேவையில் இணைய முடியும். பொலிஸ் பற்றாக்குறையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே காணப்படுகிறார். இதனால் சேவைகளை வழங்குவதில் பெரும் இடர்கள் காணப்படுகின்றன. வேலையற்ற பட்டதாரிகளிற்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பில் அவர்களுக்கு பொருத்தமான பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன. என்றார்.

Read More

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் இளம் பெண் மந்திரவாதி – எச்சரிக்கையாக இருக்கவும்

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பெண் மந்திரவாதி ஒருவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் நினைப்பதை முடித்துத்தரும் சக்தி தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார். அச் சாமியார் தொடர்பான சில கபடங்கள் வெளிவந்துள்ளன. குறித்த மந்திரவாதியின் விளம்பரத்தை பார்த்து பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த வீட்டு பணிப்பெண் தனது காதலனை பெற்றுத் தருமாறு விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். மந்திரம் செய்யும் தமிழ் பெண் தனது கணக்கிற்கு 5000 ரூபாய் பணம் வைப்பிடுமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். பணம் வைப்பிட்ட பின்னர் காதலனை பெற்றுக் கொள்வதற்காக காளி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி அதற்கு பணம் கோரியுள்ளார். இவ்வாறு மந்திரம் செய்வதற்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக பணிப்பெண் தான் பணிபுரிந்த வீட்டில் 670000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து களத்தில்…

Read More

தின பலன் – 11 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன் ராசி ரிஷபம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்-. குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை ராசி மிதுனம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில்…

Read More