இலங்கை தமிழ் அரச ஊழியர்களுக்கு முற்கூட்டி சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு அரச தமிழ் ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை 16ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இம் மாத சம்பளத்தை எதிர்வரும் 16 ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இரத்தினபுரி மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழமையாக ஆசிரியர்களுக்கு 20ம் திக்தியும், ஏனைய அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதியும் சம்பளம் கணக்கில் இடப்படுவது வழமையாகும். இம் மாதம் 16 ஆம் திகதி தீபாவளிப் பண்டிக்கை கொண்டாடப்பட இருப்பதால், சம்பளத்தையும் முற்கூட்டி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பு மாதத்திலும், ரம்லான் பண்டிகை காலத்திலும் முற்கூட்டியே சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments

comments

Related posts