இலங்கையில் ஆசிரியர் சேவையில் இருந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் முதல் நியமனப் பாடத்தை மாற்ற முடியுமா?

ஆசிரியர் சேவையில் இருந்து கொண்டு பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தங்களது முதல் நியமனப் பாடத்தை மாற்ற முடியாது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளரால் 2009.08.12ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் பின்வருமாறு தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது.

சிங்கள சுற்றறிக்கையில் 3.iv பந்தியில் இறுதி வாக்கியத்தில் ‘இதன் காரணமாக .முதலாவது ஆசிரியர் நியமனத்தில் கற்பிக்க வேண்டிய பாடம் அல்லது பாடங்களில் மாற்றம் ஏற்படாது ‘என்று உள்ளது.புதிய பிரமாணக் குறிப்பிலும் இதற்கு இடமில்லை.

இது தொடர்பாக பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை ஆசிரியர் கலாசாலைகள் மூலம் ஆசிரியர் டிப்ளோமாவை பெற்று ஆசிரியர் ஆகும் ஒருவர், அதன் பின்னர் ஆசிரியர் துறையில் இருந்துகொண்டே தனக்கு விரும்பிய துறையில் பட்டம் பெற்றாலும் கூட அவரால் தனது முதல் நியமன கற்பித்தல் பாடத்தை மாற்றமுடியாதுள்ளது. இதனால் குறித்த ஆசிரியர், தனது பட்டக் கல்வி மூலம் பெற்ற அறிவை தனது தொழிலுக்கு பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படுகிறது.

Comments

comments

Related posts