அன்பிற்கு ஏங்கி உயிரை மாய்த்த மட்டக்களப்பு இளம் பெண்

உறவுகளின் பிரிவு, தனிமை, பெற்றோரின் அரவணைப்பின்மை ஆகிய காரணங்களால் யுவதி ஒருவர் பாசத்திற்கான உயிரிழந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் குடில் வீடொன்றில் தனது அம்மாவின் அம்மாவுடன் நீண்ட நாட்களாக வசித்து வந்தவர்தான் கணேசமூர்த்தி கிருஸ்டெல்லா.

17 வயதுகள் மட்டுமே நிரம்பிய இவர், சிறுபராயத்திலேயே தனது தந்தையின் அரவணைப்பை இழந்தவர்.

கிருஸ்டெல்லா சிறுமியாக துள்ளி விளையாடும் பருவத்திலேயே அவரின் தந்தை கிருஸ்டெல்லாவையும் அவரின் தாயாரையும் தனிமையில் விட்டு பிரிதொரு பெண்ணுடன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

வருமானமின்றி தாய் மற்றும் மகள் இருவரும் மிகவும் இன்னலுற்றுள்ளனர்.

இந்நிலையிலேயே கொழும்பிலுள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்றில் தாய்க்கு வேலைவாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

தந்தையின் பாசத்தினை பெற்றுக்கொள்ள முடியாதிருந்த கிருஸ்டெல்லாவிற்கு அம்மாவின் அரவணைப்பும் வெகு தூரம் சென்றுவிட்டது.

அம்மம்மாவுடன் தனிமையில் வசித்து வந்த கிருஸ்டெல்லா திடீரென நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வறுமையை போக்க சென்ற தாயை குறைகூறுவதா சுகத்தை தேடிச்சென்ற தந்தையை குறை கூறுவதா…? கிருஸ்டெல்லாவின் வாழ்க்கை இவ்வாறு முடிந்து விட்டது.

எனினும் கிருஸ்டெல்லா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என அறிந்துக்கொள்ள காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Comments

comments

Related posts