மகனை வைத்தே தாயை பகீரங்கமாக கற்பழிக்க வைத்து கொடூர கொலை

கொங்கோ குடியரசில், அரசுக்கு எதிரான போராளிகளுக்கு உணவளித்த குற்றத்துக்காக, பெண்ணொருவர் அவரது மகனாலேயே வலுக்கட்டாயமாக, அதுவும் பகிரங்கமாக பாலுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். குறித்த பெண் உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர். அங்கு, அரசுக்கெதிரான போராளிகள் சிலர் உணவருந்திச் சென்றுள்ளனர். இதையறிந்த ஒரு கும்பல், கடைக்குள் இருந்த அந்தப் பெண்ணையும், அவரின் கணவரது மற்றொரு மனைவியின் மகனையும் நிர்வாணப்படுத்தியபின் பொது இடத்துக்கு இழுத்து வந்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியபின், அவரது மகனைக் கொண்டே அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தினர். அதன்பின், இருவரது தலைகளையும் வாளால் துண்டித்துப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றுள்ளபோதும், இது குறித்த காணொளி ஓரிரு நாட்களுக்கு முன்னரேயே இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Read More

சற்று முன்னைய செய்தி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ச மற்றும் டீ.வீ.சானக உட்பட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

தமிழ் க்ளவுட் இன் செய்தி ஒன்றுக்கு கிடைத்த சுவாரஸ்யமான கொமென்ட் இது

கடந்த தினத்தில் யாழ்ப்பாணத்தில் இளநீர் குடித்து அதன் பின்னர் அதன் அதீத விலையை கேட்டு அதிர்ந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டிருந்தோம். அந்த செய்தி வருமாறு… யாழ்ப்பாணத்தில் தாகம் காரணமாக இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் ஒருவர் அதன் பின்னர் தான் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் தனது சக ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த ஊழியர் நேற்றைய தினம் மதிய வேளையுடன் அரைநாள் விடுப்பு பெற்று வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் போது துரையப்பா விளையாட்டரங்கு வீதியும், யாழ் பழைய பொலீஸ்நிலைய சுற்றுவட்டத்தில் இருந்து துரையப்பா விளையாட்டரங்கு வீதியில் இணையும் வீதியும் சந்திக்கும் இடத்தில் டாடா பட்டா வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார். வெயிலின் தகிப்பும், தாகமும் அவ் அரச ஊழியரை தூண்டி விட, அவ் இளநீர் விற்கும் இடத்துக்கு சென்றவர் இளநீரை…

Read More

இலங்கையில் சிங்கள பெண்கள், ஆங்கில பெண்களுடன் தமிழ் ஆண்கள் ஒன்றாக போகலாம்

ஹோமாகம பகுதியில் கழிப்பாறை ஒன்றில் மீதுள்ள பதாகையின் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் கழிப்பறை ஒன்றில் தமிழ் மொழியில் மாத்திரம் ஆண்கள் கழிப்பறை என எழுத்தப்பட்டமையே இந்த குழப்பத்திற்கு காரணமாகும். ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் இந்த கழிப்பறை அமைந்துள்ளமையே விசேட அம்சமாக கருதப்படுகின்றது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் சாதரணமாக இருக்காதென பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் நீதிமன்ற வளாகம் ஒன்றில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதனை சாதாரணமாக எண்ணிவிட முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் – விபரம் உள்ளே

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. வவுனியா மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு, தற்போது உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானமெடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (09) மாலை யாழில் ஒன்றுகூடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் அடிப்படையில் ஏகமனதாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை தமிழ் அரச ஊழியர்களுக்கு முற்கூட்டி சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு அரச தமிழ் ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை 16ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இம் மாத சம்பளத்தை எதிர்வரும் 16 ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இரத்தினபுரி மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். வழமையாக ஆசிரியர்களுக்கு 20ம் திக்தியும், ஏனைய அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதியும் சம்பளம் கணக்கில் இடப்படுவது வழமையாகும். இம் மாதம் 16 ஆம் திகதி தீபாவளிப் பண்டிக்கை கொண்டாடப்பட இருப்பதால், சம்பளத்தையும் முற்கூட்டி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பு மாதத்திலும், ரம்லான் பண்டிகை காலத்திலும் முற்கூட்டியே சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Read More

இலங்கையில் ஆசிரியர் சேவையில் இருந்து கொண்டு பட்டம் பெற்றவர்கள் முதல் நியமனப் பாடத்தை மாற்ற முடியுமா?

ஆசிரியர் சேவையில் இருந்து கொண்டு பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தங்களது முதல் நியமனப் பாடத்தை மாற்ற முடியாது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளரால் 2009.08.12ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் பின்வருமாறு தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. சிங்கள சுற்றறிக்கையில் 3.iv பந்தியில் இறுதி வாக்கியத்தில் ‘இதன் காரணமாக .முதலாவது ஆசிரியர் நியமனத்தில் கற்பிக்க வேண்டிய பாடம் அல்லது பாடங்களில் மாற்றம் ஏற்படாது ‘என்று உள்ளது.புதிய பிரமாணக் குறிப்பிலும் இதற்கு இடமில்லை. இது தொடர்பாக பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை ஆசிரியர் கலாசாலைகள் மூலம் ஆசிரியர் டிப்ளோமாவை பெற்று ஆசிரியர் ஆகும் ஒருவர், அதன் பின்னர் ஆசிரியர் துறையில் இருந்துகொண்டே தனக்கு விரும்பிய துறையில் பட்டம் பெற்றாலும் கூட அவரால் தனது முதல் நியமன கற்பித்தல் பாடத்தை மாற்றமுடியாதுள்ளது. இதனால் குறித்த ஆசிரியர், தனது…

Read More

அன்பிற்கு ஏங்கி உயிரை மாய்த்த மட்டக்களப்பு இளம் பெண்

உறவுகளின் பிரிவு, தனிமை, பெற்றோரின் அரவணைப்பின்மை ஆகிய காரணங்களால் யுவதி ஒருவர் பாசத்திற்கான உயிரிழந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் குடில் வீடொன்றில் தனது அம்மாவின் அம்மாவுடன் நீண்ட நாட்களாக வசித்து வந்தவர்தான் கணேசமூர்த்தி கிருஸ்டெல்லா. 17 வயதுகள் மட்டுமே நிரம்பிய இவர், சிறுபராயத்திலேயே தனது தந்தையின் அரவணைப்பை இழந்தவர். கிருஸ்டெல்லா சிறுமியாக துள்ளி விளையாடும் பருவத்திலேயே அவரின் தந்தை கிருஸ்டெல்லாவையும் அவரின் தாயாரையும் தனிமையில் விட்டு பிரிதொரு பெண்ணுடன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். வருமானமின்றி தாய் மற்றும் மகள் இருவரும் மிகவும் இன்னலுற்றுள்ளனர். இந்நிலையிலேயே கொழும்பிலுள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்றில் தாய்க்கு வேலைவாய்ப்பொன்று கிடைத்துள்ளது. தந்தையின் பாசத்தினை பெற்றுக்கொள்ள முடியாதிருந்த கிருஸ்டெல்லாவிற்கு அம்மாவின் அரவணைப்பும் வெகு தூரம் சென்றுவிட்டது. அம்மம்மாவுடன் தனிமையில் வசித்து வந்த கிருஸ்டெல்லா திடீரென நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….

Read More

வடகொரியாவுக்கு எதிராக இலங்கையின் அதிரடி நடவடிக்கை

வடகொரியாவுடன் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இலங்கையை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து, சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, வடகொரியாவில் உள்ள எந்தவொரு நபருடனும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர் எவரும், சொத்துக்களை வழங்குவது, வாங்குவது, நிதிச் சேவைகள், தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆலோசனை, அணு திட்டத்துடன் தொடர்புடைய பொருட்கள் சேவைகள் மற்றும் உற்பத்தி, கையகப்படுத்தல் பராமரிப்பு, சேகரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து, பரிமாற்றுதல் அல்லது பயன்படுத்தல் ஆகிய விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியா அதன் அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டும். அனைத்துலக அமைதி மற்றும்…

Read More

இன்று யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரில் மின் தடைப்படும் இடங்கள்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்று(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் கூறியுள்ளார். இதன்படி, இன்று காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை குறித்த பகுதிகளில் மின்தடைப்பட்டிருக்கும் எனவும் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில்.. கொல்லங்கலட்டி, வித்தகபுரம், மாவை கலட்டி, கீரிமலை, கீரிமலைச் சந்தி கடற்படை முகாம், கூவில், நல்லிணக்கப்புரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். மன்னார் மாவட்டத்தில்.. பறயனாலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் C.T.B, கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை,…

Read More