இலங்கையை உலுகியுள்ள இரு முதுமைக் காதலர்களின் நிலைமை

அனுராதபுரத்தில் கணவன் தற்கொலை செய்து உயிரிழந்தமையை தாக்கிக் கொள்ள முடியாத மனைவியும் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது வயோதிப மனைவியை கவனிக்க தன்னிடம் ஒன்றும் இல்லாத காரணத்தினால், மனவிரக்தி அடைந்த கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 71 வயதான சோமபால என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

கணவனின் செயற்பாட்டை தாக்க முடியாத 65 வயதுடைய புஞ்சி மெனிக்கே என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தச்சுத் தொழில் செய்து வந்த கணவர் பல வருடங்களாக பக்கவாதம் நோயினால் பதிக்கப்பட்டுள்ள மனைவியை பாதுகாத்து வந்துள்ளார்.

சமூகத்தில் சிறந்தவர்களாக பிள்ளைகள் காணப்பட வேண்டும் என்பதற்காக போராடிய குறித்த இருவரும் இறுதியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

தாம் வாழ்வதற்கு வேறு வழியில்லை என சிந்தித்தவர் கடந்த 6ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பின்னர் அதற்கு அடுத்த நாள் மனைவி திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கணவர் மனைவியின் இறுதி அஞ்சலி ஒரே நேரத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் தம்புத்தேகம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments

comments

Related posts