இலங்கையில் பஸ் கட்டணத்தில் மீண்டும் அதிகரிப்பு

அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தால் நூற்றுக்கு 15 வீதம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் பஸ் கட்டணத்தையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தின பலன் – 7 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ராசி ரிஷபம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பரிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே ராசி மிதுனம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின்…

Read More